ரெண்டே மாசம்தான் டைம்.. கம்பீர் ஹர்திக் பாண்டியாவை வச்சு இத செய்தே ஆகணும் – சுனில் கவாஸ்கர் கோரிக்கை

0
121
Hardik

இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தற்பொழுது அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முக்கியமான யோசனை ஒன்றை சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் பொழுது காலில் காயம், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மிகப்பெரிய சரிவு, தனிப்பட்ட வாழ்வில் சில பிரச்சனைகள் என ஹர்திக் பாண்டியா ஒரு தனி மனிதனாக நிறைய கடினங்களைச் சந்தித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யக்கூடாது எனவும் பேசப்பட்டது. ஆனால் இன்று இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்றதில் ஒரு கதாநாயகனாக அவர் உயர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அவரை அடுத்த கட்டத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் எப்படியாவது வற்புறுத்தி கொண்டு வந்து விட வேண்டும் என சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

இந்திய அணிக்கு 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக்கு முன்பாக மிகப் பெரிய கிரிக்கெட் தொடராக ஆஸ்திரேலியாலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருக்கிறது. கடந்த இரண்டு முறையும் அங்கு சென்று இந்திய அணியை வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறை அதற்காக பழி தீர்க்க கம்மின்ஸ் தலைமையிலான படை காத்திருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசும்பொழுது சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கண்டிப்பாக இந்திய அணி நிர்வாகத்தால் ஹர்திக் பாண்டியாவை சம்மதிக்க வைக்க முடியும். அவர்கள் அடுத்த இரண்டு மாதத்தில் ஹர்திக் பாண்டியாவை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இணைப்பதற்கான முயற்சிகளை செய்து முடிக்க வேண்டும். அவர் ஒரு நாளைக்கு பத்து ஓவர்கள் பந்து வீசினால், இந்திய அணி வெல்ல முடியாததாக மாறிவிடும். மேலும் இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவில் வெல்வதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் வெல்லும்.

- Advertisement -

இதையும் படிங்க : 125 கோடி பரிசுத்தொகை.. டிராவிட் காட்டிய பெருந்தன்மை.. இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா

எனக்கு கேப்டனாக ரோகித் சர்மாவை மிகவும் பிடிக்கும். சில பேர்தான் கேப்டன் பொறுப்பில் கேப்டன்கள் ஆக இருக்கிறார்கள். இதில் ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் எந்த நிலையிலும் பதட்டப்படுவது கிடையாது. அந்தப் பொறுப்பை ரசித்து வேலை செய்கிறார்கள். ரோகித் சர்மா அணியை வழிநடத்தும் விதம் மற்றும் அவரது உடல் மொழி எனக்கு பிடித்தது” எனக் கூறியிருக்கிறார்.