125 கோடி பரிசுத்தொகை.. டிராவிட் காட்டிய பெருந்தன்மை.. இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா

0
219
Dravid

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்து நேற்று புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வென்றதற்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் போனசை ராகுல் டிராவிட் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இறுதி போட்டியில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிக் கொள்ள விரும்பினார். ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் வற்புறுத்தலில் அவர் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவில் விட்டதை வெஸ்ட் இண்டீஸில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி பிடித்தது. இந்திய அணி டி20 மூலமாக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணிக்கு மட்டும் அல்லாமல் ராகுல் டிராவிட் பெயரிலும் ஒரு உலகக் கோப்பை சேர்ந்தது.

இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி வீதம் 125 கோடி பரிசுத் தொகை அறிவித்தது. மேலும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங், பீல்டிங், பவுலிங் துணைப் பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடியும், அணிவுடன் பயணித்த மற்ற வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு தலா ஒரு கோடியும் வழங்கப்பட்டது.

அதே சமயத்தில் ராகுல் டிராவிட்டுக்கு வீரர்களுக்கு இணையாக இணையாக 5 கோடி ரூபாய் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முன் வந்திருக்கிறது. இதை ராகுல் டிராவிட் மறுத்திருக்கிறார். தனக்கு தங்களுடைய பயிற்சிக்குழுவுக்கு வழங்கப்படும் 2.5 கோடி ரூபாயே எனக் கூறி, அதையே வாங்கி இருக்கிறார். வீரர்களுக்கு இணையான பரிசுத்தொகையை பெறவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : என் சாதனையை உடைக்க.. சேவாக் கெயில்னால முடியல.. இந்த 2 இந்திய பேட்டர்ஸ் பண்ணுவாங்கனு நம்புறேன்- லாரா பேட்டி

மேலும் இதேபோல் 2018ம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற பொழுது ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசும், வீரர்களுக்கு 30 லட்சம் மற்றும் துணை ஊழியர்களுக்கு 20 லட்சம் என்று பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் டிராவிட் அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.பிறகு அனைவருக்கும் தலா 30 லட்சம் என்று திருத்தப்பட்டது. இதை மீண்டும் அவர் இந்திய அணிக்கு வந்தும் அமல்படுத்தி எல்லோரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்!