சாம்சனை இந்திய டீம்ல எடுக்காததற்கு காரணமே இதுதான்.. அவருக்கு பொறுப்பே கிடையாது – கவாஸ்கர் விமர்சனம்

0
258
Gavaskar

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியிடம் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு ராஜஸ்தான் வீரர்களின் பொறுப்பற்ற ஷாட் செலக்சன்தான் காரணம் என கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பவர் பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து சிறப்பாக சென்ற ராஜஸ்தான் அணி, அடுத்து சுழல் பந்துவீச்சாளர்களை பொறுப்பற்ற முறையில் விளையாடி, 139 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அணிக்காக ஒரு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் அடிப்பதால் மட்டும் என்ன பயன்? இவர்கள் எல்லோரும் தேவையில்லாத ஆடம்பரமான ஷாட் விளையாடி தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தார்கள். உங்கள் அணி உரிமையாளருக்கு இப்படி முக்கியமான ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று கொடுக்க முடியாவிட்டால் என்ன செய்வது? சாம்சன் பொறுப்பற்ற ஒரு ஸ்ட்ரோக் விளையாடினார்.

இது அவருக்கு எப்போதும் இருக்கின்ற பிரச்சினை. இதன் காரணமாகத்தான் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். அவருக்கு சரியான ஷாட் தேர்வு கிடையாது. அவர் இதை சரி செய்து கொண்டு வருகின்ற 2024 டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

இதேபோல் ஜெய்ஸ்வால் விளையாடிய பொறுப்பற்ற ஷாட் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது என்று நினைக்கிறேன். அவர் ஆட்ட இடைவேளையில் இருந்து திரும்பி வந்தார். அந்த நேரத்தில் அவர் உடனே பெரிய ஷாட்க்கு போக நேரம் இல்லை. எனவே அவர் சற்று தாமதித்து அந்த ஷாட்டை விளையாடி இருக்க வேண்டும். ஹைதராபாத் அணியில் பந்தை பெரிய அளவில் திருப்பக் கூடியவர்கள் யாரும் இல்லை. இவர் ஆட்டம் இழந்த காரணத்தினால் அவர்கள் கை ஓங்கி விட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் சண்டை போதும்.. 2 நாளில் டி20 உலக கோப்பை வார்ம் அப் போட்டிகள்.. இந்தியாவின் முழு அட்டவணை

இந்த நிலையில் இறுதி போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கொல்கத்தா அணி தற்பொழுது எல்லா வகையிலும் வலிமை பெற்ற அணியாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜொலித்தால் அவர்கள் கை ஓங்கி விடும். எனவே ரசிகர்களுக்கு விறுவிறுப்பான ஒரு இறுதிப் போட்டி காத்திருக்கிறது!