டி20ஐ கேப்டன் விராட் கோலிக்கு பின்னர் இவர் தான் – சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்த அந்த வீரர்

0
555
Virat Kohli and Sunil Gavaskar

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடர் நடந்து முடிந்த உடன், தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக முன்னரே அறிவித்திருந்தார். வேலைச் சுமையை குறைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகவும், இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு மட்டுமே தான் தலைமை தாங்க போவதாகவும் குறிப்பிட்டு கூறியிருந்தார். அதே போல நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்ததும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும் தான் தொடரப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் கேப்டனாக பதவி ஏற்கப் போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்பொழுது சுனில் கவாஸ்கர் ஒரு வீரரை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் தான் இனி கேப்டனாக இந்திய அணியை தலைமை தாங்க வேண்டும்

சர்வதேச டி20 போட்டிகளில் 19 முறை ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக விளையாடி இருக்கிறார். அதில் 15 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. டி20ஐ போட்டிகளில் கேப்டனாக அவருடைய வெற்றி சதவிகிதம் 78.9 ஆக உள்ளது. ஐபிஎல் தொடரிலும் அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளில் சக்கைப்போடு போட்டுக் கொண்டு வருகிறது.

அவரது தலைமையில் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றி மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது. பல்வேறு இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் தலைமை வகித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வர, தற்பொழுது சுனில் கவாஸ்கரும் அதையே கூறியுள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுவது போல அடுத்த ஆண்டும் ஒரு உலகக் கோப்பை டி20 தொடர் உள்ளது. குறிப்பிட்ட இந்த இடைவெளியில் மிகப் பெரிய பலப்பரிட்சை அல்லது அடிக்கடி மாற்றத்தை அணியில் கொண்டுவர கூடாது. அதன் அடிப்படையில் தற்போது உள்ள இந்திய அணியின் சீனியர் வீரர் என்கிற அடிப்படையிலும், அனுபவம் இறந்த வீரர் என்கிற அடிப்படையிலும் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பதவி ஏற்றால் சரியாக இருக்கும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

துணைக் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட்

ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்றால் அவருக்கு துணையாக நிச்சயமாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் இவர்கள் இருவரில் ஒருவர்தான் பதவி ஏற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இரு வீரர்கள் குறிப்பாக ரிஷப் பண்ட் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி மிக அற்புதமாக விளையாடி வருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வீரர்களை மிக சிறப்பாக ரிஷப் பண்ட் கையாண்டு வருகிறார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா மற்றும் நோர்ஜே இவர்கள் இருவரை எப்படி கையாள வேண்டுமோ, அப்படி ரிஷப் பண்ட் மிக நேர்த்தியாக கையாள்கிறார். அவர் ஒரு புத்திசாலித்தனம் மிக்க கிரிக்கெட் வீரர். எனவே அவர் துணை கேப்டனாக பதவி ஏற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.