அது ஏன் இல்லை? இது ஏன் இல்லை? என்று டி20 உலகக் கோப்பை இந்திய அணியைப் பார்த்து கேட்காதீர்கள் – சுனில் கவாஸ்கர் கோபம்!

0
113
Gavaskar

இந்திய கிரிக்கெட் தாண்டி வெளி கிரிக்கெட் வட்டாரங்களிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பைக்கான, இந்திய அணி பற்றியான அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.

அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பேட்ஸ்மென்களாக கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் மற்றும் சாகல் இருக்கிறார்கள்.

இந்த டி20 உலக கோப்பை இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்சல் படேல், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் காத்திருப்பு பட்டியலில் முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சஹர் ஆகியோர் இருக்கிறார்கள். தற்போது இந்த அணி குறித்து தனது கருத்தை இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது ” ரவி பிஷ்னோய் ஒரு குறுகிய காலத்தில் தன்னை தவிர்க்க முடியாத வீரராக மாற்றியிருக்கிறார். இன்னும் ஓரிரு வருடங்களில் ஒரு உலகக் கோப்பை இருக்கிறது. அவர் அடுத்து நிறைய உலகக் கோப்பைகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. மேலும் அவரால் எல்லா அணிகளிலும் நுழைந்திட முடியாது என்கிற அனுபவம் தற்போது இதன் மூலம் கிடைத்திருக்கும் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இது மிகவும் நல்ல அணியாகத் தெரிகிறது ஹர்சல் படேல், ஜஸ்பிரித் பும்ரா இறங்குவதால், இந்திய அணியால் இரண்டாவது பந்துவீசி எதிரணிகளை மடக்கி வெல்ல முடியும். இதுதான் தற்போது இந்திய அணிக்கு பிரச்சனையாக இருந்தது. இவர்களின் வருகை இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று கூறி இருக்கிறார்…

மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” இந்த அணியில் தீபக் சஹர் என்பது ஒரு தனித்து நிற்கும் பெயர். ஆனால் வேகப்பந்து வீச்சு தாக்குதலில் ஒரு இடதுகை வீரரும் வேண்டும் என்பதால் அர்ஸ்தீப் சிங்கை அவர்கள் அணிக்குள் வைத்திருக்கிறார்கள். நான் சொன்னது போல இது ஒரு நல்ல அணி தேர்வு. இந்த விஷயத்தைப் பற்றி எப்பொழுதும் பேசலாம். ஆனால் தற்போது அனைத்து தேர்வும் முடிந்து விட்டது. இது இந்தியாவின் அணி. எனவே இது ஏன் இல்லை? அது ஏன் இல்லை? என்று கேட்க வேண்டாம். இந்திய அணியை 100 சதவிகிதம் ஆதரிக்கவேண்டும். இப்போது தேர்வு முடிந்து விட்டது. இது எங்கள் அணி. அவர்களுக்கு நூறு சதவீதம் ஆதரவு ” என்று தெரிவித்திருக்கிறார்!