கேஎல் ராகுல் அணிக்கு திரும்பினால் இடம் பறிபோக வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்கள்!

0
2512
Gill

நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் வரிசையில் உள்ள நான்கு பேட்ஸ்மேன்களை வெகு எளிதாக இழந்து இருந்தாலும் கூட, பல சாதகமான விஷயங்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது!

இதில் மிக முக்கியமான விஷயம் இஷான் கிஷான். இவர் துவக்க இடத்தில் விளையாடு இந்த ரன் வந்திருந்தால் கூட இவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இவர் மிடில் ஆர்டரில் விளையாடி இந்த கண்களை எடுத்தது மிகப்பெரிய சாதகமான அம்சங்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தந்திருக்கிறது.

- Advertisement -

இதே வேளையில் களத்திற்கு வெளியே இருந்து ஒரு சாதகமான விஷயம் ஒன்று இந்திய அணி நிர்வாகத்திற்கு கிடைத்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கு கே எல் ராகுல் கிடைக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அவர் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நாளை மறுநாள் அணியை அறிவிப்பதற்கான கடைசி நாள் ஆகும். இதற்கு முன்பாக தேசிய கிரிக்கெட் அகாடமி கே எல் ராகுல் உடல் தகுதி பற்றி பாசிட்டிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அவர் அணிக்கு திரும்ப வந்தால், யாருடைய இடங்களை எல்லாம் அவரால் நிரப்ப முடியும் என்று இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

இஷான் கிஷான் :

- Advertisement -

கே.எல்.ராகுல் இந்திய உலகக்கோப்பை அணிக்கான முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார். எனவே அவர் இசான் கிஷானுக்கு நேரடியான மாற்றாகவே இருப்பார். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றதோடு, தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான நெருக்கடியான நேரத்தில், மிகச் சிறப்பான அரை சதத்தை அடித்த இஷான் கிஷான், உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது உறுதி.

ஸ்ரேயாஸ் ஐயர் :

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்த விஷயம் பேட்டிங் வரிசையில் நான்காவது இடம். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு தந்தவராக ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். நேற்றைய போட்டியில் அவர் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் கூட, அவரது பேட்டிங் அணுகுமுறை மிகவும் நம்பிக்கையாக தைரியமாக இருந்தது. இவருடைய ஒருநாள் கிரிக்கெட் சராசரி 45, ஸ்ட்ரைக் ரேட் 95 என இருக்கிறது. இவரது இடத்தை கேஎல்.ராகுலால் நிரப்ப முடியும்.

சுப்மன் கில் :

இஷான் கிஷானின் புதிய பேட்டிங் எழுச்சி, கே எல் ராகுலின் வருகை தற்போது பெரிய பிரச்சினையாக சுப்மன் கில்லுக்குத்தான் மாறி இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் இரண்டு பேருமே துவக்க வீரர்களாக விளையாட கூடியவர்கள். சிறந்த ஐபிஎல் சீசனை இந்த வருடம் பெற்ற இவர், 12 இன்னிங்ஸ்களில் 704 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்திருக்கிறார். சராசரி 64, ஸ்ட்ரைக் ரேட் 113 என அருமையாக இருக்கிறது. இந்த ரன்கள் பெரும்பாலும் சிறிய அணிகளுடன் வந்திருக்கிறது. தற்போது பேட்டிங் ஃபார்மில் திடீரென்று தடுமாறி வரும் சுப்மன் கில், இஷான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல் இடம் தனது இடத்தை இழந்தால் ஆச்சரியம் கிடையாது!