பிரித்வி ஷாவை விட.. கில் பெரிய ஆளா வருவாருன்னு அப்பவே சொன்னேன்.. காரணம் இதான் – சைமன் டால் பேட்டி

0
75
Gill

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் பிரித்வி ஷாவை விட பெரிய பேட்ஸ்மேன் ஆக வருவார் என தான் முன்கூட்டியே கணித்தது எப்படி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான கட்டத்தில், இந்திய வீரர் சுப்மன் கில் மிகவும் பொறுப்புடன் விளையாடி இந்திய அணி முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ரன்னுக்கு ஒரு விக்கெட் என்று இருந்து 86 ரன்னுக்கு நான்கு விக்கெட் என திடீரென சரிந்தது. அப்போது களத்தில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாட இந்த ஜோடி 114 பந்துகளில் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் சுப்மன் கில் இந்திய அணி முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து, 146 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 90 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இறுதியாக 263 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

சுப்மன் கில்லை அப்பொழுதே கணித்தேன்

இந்த நிலையில் கில் பற்றி பேசி இருக்கும் சைமன் டால் கூறும் பொழுது “ஒரு இளம் வீரர் ஒரு தொடரின் நடுவில் தன்னுடைய அபிலிட்டியை மாற்றிக் கொள்ளும் திறன் மிகவும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நியூசிலாந்தில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் முதல்முறையாக நான் கில்லை பார்த்தேன். அப்பொழுது பிரித்வி ஷா குறித்து நிறைய பேச்சுக்கள் சென்று கொண்டிருந்தது”

“அப்பொழுது நான் மட்டுமே பிரித்வி ஷா பேட்டிங் டெக்னிக்கில் சில முக்கிய குறைபாடுகள் இருந்த காரணத்தினால், கில் அவரைவிட பெரிய வீரராக வருவார் என தைரியமாக முதன் முதலில் வெளியே கூறினேன்”

இதையும் படிங்க : 13 டக் அவுட்.. இந்திய அணி 50 வருட மோசமான சாதனை.. நியூசிலாந்து தொடரில் நடந்த வினோதம்

“நான் அவரை முதலில் பேட்டி எடுக்கும் பொழுது, அவர் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்றும் பெரிய சதங்கள் எடுக்க வேண்டும் என்றும் பசியை கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். டெஸ்ட் மட்டத்திலும் அவர் இதையே செய்ய விரும்புகிறார். அவருக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட் மிகவும் முக்கியமானது அதே சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதை செய்ய நினைக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -