13 டக் அவுட்.. இந்திய அணி 50 வருட மோசமான சாதனை.. நியூசிலாந்து தொடரில் நடந்த வினோதம்

0
49
Sarfaraz Khan and Rohit Sharma

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட்களை விட மூன்றாவது போட்டியை இந்திய அணி சிறப்பாக தொடங்கியும், சில இந்திய வீரர்கள் டக் அவுட் ஆகி தங்களது 50 வருட மோசமான சாதனையை முறியடித்துள்ளது.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டி

டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது, தங்களது முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. அதிகபட்சமாக வில் யங் 71 ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 82 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியை பொறுத்த வரை, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து தங்களது பேட்டிங் கணக்கை தொடங்கிய இந்திய அணி, 263 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள், ரிஷப் பண்ட் 60 ரன்கள் மற்றும் வாசிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்தார்கள். நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா 18 ரன்கள் மற்றும் விராட் கோலி நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்தார்கள்.

- Advertisement -

50 வருட மோசமான சாதனை

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் முகமது சிராஜ், சர்ஃப்ராஸ் கான் மற்றும் ஆகாஷ் டீப் ஆகிய மூவரும் எந்த ரன்களும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். இதன் மூலமாக, இந்திய பேட்மேன்கள் இதுவரை இந்தத் தொடரில் 13 முறை டக் அவுட் ஆகி உள்ளார்கள். இந்திய அணிக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கம்பீர் இது சரியில்லை.. சர்பராஸ் கானை வைத்து ரொம்ப மோசமான முடிவு – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

13 முறை இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனதின் காரணமாக, 50 வருடத்தின் முன்பாக இந்திய அணி படைத்த தங்களது மோசமான சாதனையை முந்தி உள்ளது. 1974 இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 முறை டக் அவுட் ஆனதே இதுவரை மூன்று அல்லது அதற்கு குறைவான டெஸ்ட் போட்டிகள் உள்ள தொடரில், இந்திய அணியின் அதிகபட்ச டக் அவுட்டாக இருந்தது. தற்போது 13 டக் அவுட்டுகளின் மூலமாக ரோகித் தலைமையிலான இந்திய அணி அதை முந்தி உள்ளது. 1974 டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்தது, ஆனால் இந்த தொடரோ இந்திய மண்ணில் நடந்து வருவதால் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -