“இது போன்ற முடிவுகள் இந்திய அணிக்கு ஆபத்தாக அமையலாம்” – முரளி கார்த்திக் எச்சரிக்கை!

0
114

ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது இதற்காக அந்த அணி கடந்த வாரம் இந்தியா வந்தது.

தொடரை வெல்லும் உத்வேகத்தில் வந்த ஆஸ்திரேலியா பெங்களூர் வந்து இறங்கியதும் உடனடியாக பயிற்சிகளை தொடங்கியது. மேலும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு பிரத்தியேகமான பயிற்சிகளையும் செய்து வருகிறது அந்த அணி. ரவிச்சந்திரன் அஸ்வினை போன்றே பந்து வீசக்கூடிய ஒரு பந்துவீச்சாளரை அழைத்து வந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

கடந்த மூன்று தொடர்களின் தோல்வி இந்த முறை இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பை ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த தொடரானது இந்திய அணிக்கும் முக்கியமான ஒன்று. சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா கடந்த ஒரு வருடமாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் போட்டிகளில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்டில் மிகவும் போராடியே வெற்றி பெற்றது.

மேலும் இந்த டெஸ்ட் போட்டி தொடரின் தோல்வி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் முக்கியமான போட்டி தொடராக பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காத இந்திய அணி இந்த முறையும் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் தனது கருத்துக்களை பிடிஐ செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து இருக்கிறார். அதில் பேசிய அவர் ” கடந்த ஒரு வருடமாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்தான் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கின்றனர். காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. மேலும் இந்திய அணியின் ஸ்டார் வீரர்களான புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரும் நல்ல பார்மில் இல்லை. கேஎல்.ராகுல் கடந்த ஒரு வருடத்தில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர்” பேட்டிங் சாதகமான ஆடுகளங்களில் ஸ்பின்னர்களை விளையாடுவது நமக்கு பிரச்சனை இல்லை. தரமான சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நமது ஆட்டக்காரர்கள் சிரமங்களுக்கு உள்ளானதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் போட்டி தொடர்களுக்கு எந்த மாதிரியான ஆடுகளங்கள் தயார் செய்யப்படும் என தெரியவில்லை .ஆனால் ரேங்க் டர்னர் ஆடுகளங்களை பயன்படுத்தினால் அது இந்திய அணிக்கு பாதகமாக முடியலாம் என கூறி முடித்தார.