இன்று பஞ்சாப் குஜராத் போட்டியில் இப்படி ஒரு சாதனையா! அதுவும் ஒரு வேகப்பந்துவீச்சாளர்!

0
199
Ipl2023

இன்று பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் ஐபிஎல் 16 வது சீசனின் 18 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன!

இந்தப் போட்டியில் முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஷர்ட் 36 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 25 ரன்கள், கடைசி கட்டத்தில் ஷாருக்கான் 9 பந்துகளில் 22 ரன்கள் என எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. மோகித் சர்மா நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் மற்றும் சகா இருவரும் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்களால் இவர்களுக்கு ஆரம்பத்தில் எந்தவித தொந்தரவையும் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்காக இந்த சீசனில் முதன் முறையாக களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க வேகப்ப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, தனது இரண்டாவது ஓவரை ஆட்டத்தின் ஐந்தாவது ஓவராக வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஷார்ட் பாலாக வீச, அதைச் சகா தூக்கி அடிக்க, பந்து எல்லை கோட்டுக்கு அருகில் நின்ற மேத்யூ ஷார்ட் இடம் கேட்ச் ஆனது.

ககிசோ ரபாடா கைப்பற்றிய இந்த விக்கெட் அவருக்கு ஐபிஎல் தொடரில் நூறாவது விக்கெட் ஆகும். இந்த விக்கெட் மூலம் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் 100 விக்கட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். பெரும்பாலும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமிக்கும் இந்தச் சாதனை பட்டியலில், டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் முதல் இடத்தில் வந்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். மேலும் இந்த பட்டியலில் ஐபிஎல் தொடரில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் நான்கு இடத்தில் இருப்பதும் ஆச்சரியமான விஷயம்!

- Advertisement -

குறைந்த போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்.

64 – ககிசோ ரபாடா
70 – லசீத் மலிங்கா
81 – புவனேஸ்வர் குமார்
81 – ஹர்சல் படேல்
83 – ரஷீத் கான்
83 – அமித் மிஸ்ரா
83 – ஆசிஸ் நெக்ரா
84 – யுஸ்வேந்திர சாகல்