இப்படி ஒன்று இதுவரை எந்த ஐபிஎல் சீசனிலும் நடந்ததே கிடையாது ; அட ஆமால்ல; ஆகாஷ் சோப்ரா பெரும் வியப்பு!

0
566
Gill

நேற்று குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் வென்று முதல் அணியாக இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் சதம் அடித்து அற்புதமான துவக்கம் தந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருதை கில் வென்றார். இந்த போட்டியில் அவரது ஆட்டம் மிக பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தது. 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் சதத்தை எட்டினார்.

இவரது ஆட்டம் குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா ” போட்டியில் மிக மதிப்பு மிகுந்த வீரர் கில்தான். முகமது சமி மற்றும் மொகித் சர்மா தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கலாம். நாங்கள் அவர்களை நோக்கி சென்று இருக்கலாம் ஆனால் கில் செய்த வேலை வேறு விதமானது.

இது 220 எடுத்திருக்க வேண்டிய ஆடுகளமா என்றால் ஆம் அல்லது இல்லை. ஆனால் நமது பையன் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறான். இந்த மைதானத்திற்கு அவன் வரும்பொழுது அவனை யாரும் தடுக்க முடியாது. இந்தப் போட்டிக்கு முன்பு இந்த மைதானத்தில் சராசரி 75 ஆக இருந்தது தற்போது அது உயர்ந்து விட்டது.

- Advertisement -

இந்த மைதானத்தில் மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 160 இருக்கிறது. அதே சமயத்தில் வெளியே செல்லும் பொழுது 115 ஆக குறைகிறது. இந்த ஆடுகளத்தை பையில் வைத்து சுருட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கில் மீண்டும் எல்லோரது மனதையும் வென்றார். அவர் நன்றாக செயல்படும் பொழுது நாம் நன்றாக உணர்கிறோம். இந்த சீசனில் மொத்தம் ஐந்து இந்திய வீரர்கள் சதம் அடித்திருக்கிறார்கள். இது இதுநாள் வரையில் ஐபிஎல் சீசனில் எப்பொழுதும் எதிலும் நடந்தது கிடையாது. ஐந்து இந்தியர்கள் ஒரு ஐபிஎல் சீசனில் மொத்தமாகச் சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது மட்டும் இல்லாமல் நேற்றைய போட்டியில் கில் சதம் அடிக்க ஹைதராபாத் அணி தரப்பில் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 5 விக்கட்டுகள் வீழ்த்தி இருந்தார். இதுவும் இதனால் வரையில் நடக்காத ஒரு விஷயம்.