“இப்படி ஒரு தோல்வி வெட்கமா இருக்கு.. உ.கோ முன்னால இது எங்களுக்கு பாடம்!” – இலங்கை பயிற்சியாளர் வேதனையான பேச்சு!

0
1716
Silver wood

நேற்று இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட ஆசிய கோப்பையில் இறுதி போட்டி மொத்தமாக 2:30 மணி நேரங்கள் மட்டுமே நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவர்கள் மட்டும் விளையாடி 50 ரன்கள் மட்டுமே பத்து விக்கெட் களுக்கு எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 6.1 ஓவரில் இலக்கை அனாயசமாக அடித்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொத்தம் 21.3 ஓவர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் நடைபெற்றது. இடைவேளையோடு சேர்த்து போட்டி தொடர்ந்த நேரம் இரண்டரை மணி நேரம் மட்டுமே. ஆசியக் கோப்பை வரலாற்றின் இறுதி போட்டி இப்படி இதுவரை நடந்தது கிடையாது

நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று யாரும் கடந்த முறை போலவே நினைக்கவில்லை. ஆனால் நூல் இழை வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தப்பித்து இரண்டாவது சுற்று வந்த இலங்கை, மிகச் சிறப்பாக செயல்பட்டு பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்றைய தோல்வி அவர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட் கூறுகையில்
“சில சமயங்களில் இப்படியான அடிகள் விழுவது மோசமான ஒன்று கிடையாது. இந்தியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து மாதிரியான பெரிய அணிகளுக்கு எதிராக உலக கோப்பையில் விளையாடுவதற்கு இது ஒரு விழிப்புணர்வாக அமையும்.

- Advertisement -

அடுத்து விளையாட இருக்கும் உலகக் கோப்பைக்கு இதிலிருந்து நாம் ஒரு ஊக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த வகையில் செய்து முடித்திருப்பது வெட்கமாக இருக்கிறது. அருகில் ஒரு பெரிய தொடர் இருக்கும் பொழுது வேறு எதையும் யோசிக்க முடியாது. ட்ரெஸ்ஸிங் ரூமில் கற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் எழுப்பக்கூடிய கேள்விகள் இருக்கின்றன.

நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு சில நல்ல கிரிக்கெட் போட்டிகளை விளையாடினோம். நாங்கள் இதற்கு மிகவும் கடினமாக போராட வேண்டி இருந்தது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு சாதனைதான். இந்த ஒரு நாளை மொத்த விஷயத்தில் இருந்து கழித்து விட்டால், பதிரனா மற்றும் வெல்லாலகே இருவரும் உலக அரங்கில் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.

இரண்டு இளம் திறமைகள் வெளிப்பட்டு இருக்கிறது. சதிரா மற்றும் குசால் மெண்டிஸ் சில போட்டிகளில் நன்றாக விளையாடினார்கள். ஆனால் நாங்கள் தெளிவாக பேட்டிங்கில் நிலைத்தன்மையை கொண்டு வர வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!