தற்போது இந்திய டி20 பணியில் பும்ராவை விட முக்கியமான ஒரு பவுலர் இருக்கிறார் என தமிழக மற்றும் இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் பரபரப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்திய டி20 அணிந்து நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பைக்கு மிக வேகமாக பல பரிசோதனை முயற்சிகளை செய்து தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் கம்பீர் தலைமை பேச்சாளராக வந்த பிறகு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அணி மும்பை விட இன்னும் வலிமையாக மாறியிருக்கிறது.
கம்பீர் கட்டி உள்ள இந்திய டி20 அணியில் எல்லோரும் எல்லா இடங்களிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய விதியாக இருக்கிறது. எல்லோருமே அச்சம் இல்லாத கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது அறிவுறுத்தலாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது “தற்போது இந்திய டி20 அணியில் பும்ராவை விட மிகவும் மதிப்பு வாய்ந்த முக்கியமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம்முடைய வருண் சக்கரவர்த்திதான். அவர் எப்படிப்பட்ட சிறந்த பவுலராக இந்திய டி20 அணியில் இருக்கிறார் என்பதை அவருடைய எண்கள் நமக்கு சொல்கிறது”
“எதிரணி ரன்கள் எடுக்கிறது என்றால் உடனடியாக பவர் பிளே, மிடில் ஓவர்கள், கடைசி கட்ட ஓவர்கள் என எல்லா நேரத்திலும் கேப்டனால் அழைக்கப்படும் பவுலராக வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். முதலில் உடல் தகுதி இல்லை என அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு அவருடைய மறுபிறவேசம் மிக ஆச்சரியமான முறையில் இருக்கிறது. அவரது பந்துவீச்சு செயல்பாடு நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது”
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவின் இந்த வீக்னஸ் பத்தி.. நான் யுவராஜ் சிங்கிட்ட பேச போறேன் – இர்பான் பதான் சுட்டிக்காட்டல்
“வருண் சக்கரவர்த்தி உண்மையாக இந்திய அணிக்கு பெரிய சொத்து. அவர் பவுலிங் யூனிட்டில் மிகப்பெரிய ஆயுதமும் கூட. டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் அவர் இந்திய அணிக்கு முக்கிய எக்ஸ்பெக்டராக இருப்பார். பந்துவீச்சில் வரும் சக்கரவர்த்திக்கு ஒரு நல்ல நாள் இருந்தால், அந்த நாள் இந்திய அணிக்கும் நல்ல நாளாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.