தற்போது இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக திரும்பி வந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் டெக்னிக்கில் அடிப்படையில் பிரச்சனை இருப்பதாக சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.
கடந்த போட்டியில் ஜிம்பாபேவுக்கு எதிராக மீண்டும் இந்திய பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எடுத்ததும் சிக்ஸர் உடன் ஆரம்பித்த அவர் நல்ல முறையில் விளையாடினார். ஆனால் அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பெரிய ஸ்கோராக அவர் மாற்றாமல் மீண்டும் பழைய முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அஸ்வின் வருத்தம்
சஞ்சு சாம்சன் இடம் தனக்கு இருக்கும் மிகப் பிரச்சனையே அவர் ஆட்டம் இழக்கும் முறைதான் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் அவர் சதம் அல்லது வெற்றி பெறுவதற்கான ஸ்கோரை ஒரு போட்டியில் ஆவது இந்த உலகக் கோப்பையில் எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
சஞ்சு சாம்சனை பொருத்தவரையில் அவர் செட்டில் ஆகிவிட்டார் என ரசிகர்கள் நிம்மதியாக மேட்ச் பார்க்க முடிவதில்லை. அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விக்கெட்டை மிகவும் மோசமான முறையில் கொடுத்துவிட்டு வெளியேறக் கூடியவராக இருப்பது பெரிய தலைவலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை டெக்னிக் பிரச்சனை
இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது “சாம்சனுக்கு பந்து அவரை நோக்கி உடம்புக்குள் லெக்சைடு வருகின்ற பொழுது, அவர் தொழில்நுட்ப ரீதியாக தவறாகவே இருக்கிறார். மேலும் அவர் மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி பவுலருக்கு டார்கெட்டை கொடுக்கிறார். சிறுவயதில் இருந்து பயிற்சி பெறும் பொழுதே ஒரு பவுலருக்கு இப்படி மூன்று ஸ்டெம்புகளையும் திறந்து காட்டக் கூடாது என்பதுதான் முக்கியமான விஷயமாக சொல்லிக் கொடுக்கப்படும்”
இதையும் படிங்க : 20 ஓவர்ல 160 ரன் அடிக்காத பாகிஸ்தான்.. 13.2 ஓவர்ல எப்படி அடிக்கும்.. பிரார்த்தனை பலிக்காது – சேவாக் கலகலப்பு பேச்சு
“இந்திய அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன் களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். எனவே இவர்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சொல்வதைக் கேட்பார்களா? என்று எனக்கு தெரியவில்லை. என்ன இருந்தாலும் அவருக்கு திட்டவட்டமான பேட்டிங் டெக்னிக் பிரச்சனை இருக்கிறது என்பது உண்மை. இதை உலகக்கோப்பையில் சரி செய்வது என்பது மிகவும் கடினமானது” என்று கூறியிருக்கிறார்.






