இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வென்று பாகிஸ்தான் அணி செமி பைனலுக்கு முன்னேற வாய்ப்பில்லை என வீரேந்தர் சேவாக் அவருடைய பாணியில் நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார்.
இன்று நடைபெறும் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் இல்லை ஏழு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுது வெற்றி பெற வேண்டும், அப்பொழுதுதான் செமி பைனலுக்கு முன்னேற முடியும் என்கின்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானால் முடியுமா?
தற்போது பாகிஸ்தான் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் மொத்த போட்டிகளையும் இலங்கையின் பெரிய மைதானங்களில் விளையாடி வருகிறது. மேலும் ஆடுகளங்கள் மெதுவாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இங்கு அதிரடியாக விளையாடுவது மிகவும் கடினம். மேலும் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருக்கிறது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்து 160 முதல் 170 ரன்கள் எடுத்தால் இலங்கை அணியை குறைந்தது 100 ரன்னுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டியதாக இருக்கும். இல்லையென்றால் 13.2 ஓவரில் இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை துரத்த வேண்டும் என்றால் முடியாத காரியம். எனவே பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.
பிரார்த்தனை பலிக்காது
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்கின்ற அவர்களது பிரார்த்தனை நிறைவேறி இருக்கிறது. ஆனால் செமி பைனலுக்கு போக வேண்டும் என்ற பிரார்த்தனை நிறைவேறாது. இவ்வளவு காலமாக அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் ஆனால் பலிக்கவில்லை. எனவே இதுவும் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : இது சரி இல்ல.. சேவாக் கூட அபிஷேக்கை கம்பேர் பண்ணாதீங்க.. அவர் எப்படிப்பட்ட பிளேயர் தெரியுமா? – கங்குலி கருத்து
“அவர்கள் செமி பைனலுக்கு தகுதி பெறுவார்கள் என்றால் அது நல்ல விஷயம்தான். அவர்கள் 160 ரன்கள் எடுத்து 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றால் இலங்கை மிக மோசமான கிரிக்கெட் விளையாட வேண்டி இருக்கும். அவர்கள் நூறு ரன்னுக்குள் ஆக ஆல்-அவுட் ஆக வேண்டியது வரும். அதே சமயத்தில் 13.2 ஓவரில் இலக்கை துரத்தலாம். ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் அப்படி இல்லை. பாகிஸ்தானால் மொத்த 20 ஓவரில் 160 ரன் எடுக்க முடியாத பொழுது எப்படி இதை துரத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.






