“இந்திய அணிக்கு சுப்மன் கில் தகுதி இல்லாதவர் பாரபட்சம் காட்றாங்க” – முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
457

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இதில் கடந்த பன்னிரண்டாம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களிலேயே முடிவுற்றது . இந்தப் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது .

- Advertisement -

மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஆறு ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இவர் பேட்டிங்கில் ஏமாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் மாண வெங்கடேஷ் பிரசாத் கில்லின் தேர்வு குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர் பல விரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார் .

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெங்கடேஷ் பிரசாத் ” கில் திறமையான வீரர் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவருடைய திறமையின் மீது எனக்கு மரியாதை உண்டு . ஆனால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 30 இன்னிங்ஸ் ஆடிய பிறகும் அவரது டெஸ்ட் சராசரி 30. இது மிகவும் சுமாரான ஒரு சராசரியாகும்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பதிவு செய்திருக்கும் அவர் ” நிறைய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவிலான ரன்களை எடுத்து தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் . இளம்வீரர் ப்ரீத்வி ஷா அருமையான பார்மில் இருக்கிறார் . சர்பராஸ் கான் ஏராளமான ரண்களை உள்நாட்டுப் போட்டிகளில் குவித்து வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார் . அப்படி இருக்கும்போது சுப்மண் கில்லுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் ஏன் வழங்கப்படுகிறது” ? என கேள்வி எழுப்பினார்

“சுப்மன் கில் அணியில் தேர்வு செய்யப்படுவது அவர் பலருக்கும் விருப்பமான வீரராக இருப்பதால்தான். இல்லையென்றால் என்றோ அணியில் இருந்து கழற்றி விடப்பட்டிருப்பார். அவர் பலருக்கும் விருப்பமான வீரராக இருப்பதால்தான் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதனைப் பற்றி வாயைத் திறக்காமல் இருக்கின்றனர்” எனக் கூறியிருக்கிறார் பிரசாத்.