“ஐபிஎல் போன்று ஆட முடியாது” … “சுப்மன் கில் இந்த வீரருக்கு எதிராக நிச்சயம் திணறுவார்” – இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கருத்து!

0
1192

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன . 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் தோல்வியடைந்தது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்தியா . இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சிகர்களிடமும் இருந்து வருகிறது . ஆனால் ஆஸ்திரேலியா அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது . அந்த அணியின் மிச்சல் ஸ்டார்க் ஜோஸ் ஹேசல்வுட் போலான்ட் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் .

இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கே உதவும் வகையில் இருக்கும் என்பதால் இது ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு சாதகமானதாகவே கருதப்படுகிறது . இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை கடந்த டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி சுப்மண் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினர் . அஜிங்கிய ரகானே மீண்டும் அணியில் இடம் பெற்று இருப்பது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது .

இந்நிலையில் சுப்மன் கில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 890 ரகளை குவித்து ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் . இந்திய அணியின் அடுத்த விராட் கோலி ஆக அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . சமீபத்திய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரருமான கிரேக் சேப்பல் மற்ற வீரர்களை போல சுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறு என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” சுப்மன் கில்லின் பேட்டிங்கில் ஒரு சில குறைகளை கண்டேன் . அதனை ஆஸ்திரேலிய வீரர்களும் கவனித்து இருப்பார்கள் என நினைக்கிறேன். அதிகமான வேகம் மற்றும் சரியான லென்த்தில் பந்து வீசும் அதன் மூலம் அவரை எளிதாக ஆட்டமிழக்க செய்யலாம் . ஸ்டார்கின் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிச்சயமாக சுப்மன் கில்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கில் ஒரு திறமையான வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . இந்தியா இளம் வீரர்களை நன்றாக உணர்த்துகிறது . சுப்மன் கில் போன்ற ஒரு வீரர் 22 வயதிலேயே ஏராளமான சர்வதேச கிரிக்கெட் அனுபவங்களை வைத்திருக்கிறார் . இருந்தாலும் அவரது ஆட்டத்தில் ஒரு சில மிகச்சிறிய குறைகள் இருக்கின்றன . அது இங்கிலாந்தின் சீதோசன நிலையில் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார் .