லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகள்; ஸ்டுவர்ட் பிராட் மிகப்பெரிய சாதனை!!

0
27

லாட்ஸ் மைதானத்தில் மட்டும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்திருக்கிறார் ஸ்டூவர்ட் பிராட்.

இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து பேச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் லாட்ஸ் மைதானத்தில் மட்டும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்திருக்கிறார். இவருடன் சேர்ந்து டெஸ்ட் போட்டியில் ஜோடியாக பந்து வீசும் ஜேம்ஸ் ஆண்டர்சன், லார்ட்ஸ் மைதானத்தில் 117 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவர் மட்டுமே தற்போது டெஸ்ட் போட்டிகளில் லாட்ஸ் மைதானத்தில் மட்டும் 100 விக்கெட்டுகளை கடந்தவர்களாக இருக்கின்றனர்.

லாட்ஸ் மைதானம் தவிர, வேறு எந்த மைதானத்திலும் 50 விக்கெட்டுகளை கடந்தது இல்லை. ஹேட்டிங்ளே மைதானத்தில் 49 விக்கெட் கைப்பற்றியது இரண்டாவது அதிகபட்சமாக இருக்கிறது.

இதுவரை 157 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள பிராட், 553 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வேகபந்துவீச்சாளராகவும் இருக்கிறார். முதல் இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கிளென் மெக்ராத் ஆகியோர் இருக்கின்றனர்.

லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்காமல் 165 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் சாரல் ஏர்வி 73 ரன்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.