இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் நூறு பந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அணுக வேண்டும்? என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியிருக்கிறார்.
பென் ஸ்டோக்ஸ் 100 பந்து தொடரில் காயமடைந்த நிலையில் அவர் மேற்கொண்டு இங்கிலாந்தின் கோடைக்காலம் முழுவதிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆசஸ் தொடரை வெல்ல வேண்டும் என்பதற்காக 18 மாதங்களாக கடுமையாக போராடி பந்து வீசும் அளவுக்கு உடல் தகுதியை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிராக ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி ஒல்லி போப் தலைமையில் விளையாடுகிறது. மேலும் இங்கிலாந்து அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி காயம் காரணமாக இடம் பெறவில்லை.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் ஸ்டுவர்ட் பிராட் கூறும் பொழுது “ஒரு டெஸ்ட் போட்டி அணிக்கு இது உண்மையான அவமானம் என்று நான் கருதுகிறேன். பென் ஸ்டோக்ஸ் காயத்தின் காரணமாக கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை, ஒட்டுமொத்த இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரை பாசிட்டிவாக அணுக வேண்டும். மேலும் பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு புது சவால் உருவாகி இருக்கிறது.
கடந்த 18 மாதங்களாக பந்து வீச முடியாமல் இருந்து கடுமையாக உழைத்து உடல் தகுதியை பெற்று பென் ஸ்டோக்ஸ் திரும்ப வந்தார். இதுவே ஆஸ்திரேலியதொடரில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? எனவே இது புதிய கேப்டன் ஒன்லி போப்க்கு ஒரு நல்ல அனுபவமாக அமையும்.
இதையும் படிங்க : 2024 துலீப் டிராபி.. பிசிசிஐ வாய்ப்பு தராத முக்கிய 7 வீரர்கள்.. டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதானா?
பென் ஸ்டோக்ஸ் இல்லாத அணியை நாங்கள் யாருமே விரும்ப மாட்டோம் என்பது உண்மைதான். அதே சமயத்தில் நீங்கள் இதில் உள்ள பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியானவிஷயங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் பென் ஸ்டோக்ஸ் எப்படியும் உங்களுடன் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.