2024 துலீப் டிராபி.. பிசிசிஐ வாய்ப்பு தராத முக்கிய 7 வீரர்கள்.. டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதானா?

0
237
Rinku

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் ஏழு முக்கிய இந்திய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வெள்ளைப் பந்து வடிவத்திற்கு மட்டுமே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்ப்பதாக தெரிகிறது. அதே சமயத்தில் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று பார்க்கலாம்.

ரிங்கு சிங் :
உள்நாட்டு கிரிக்கெட்டை பொருத்தவரையில் எடுத்துக் கொண்டால் இவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார். இவருக்கு 54 ஆவரேஜ் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் உள்நாட்டில் இருக்கிறது. ஏழு சதங்கள் 20 அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் 3000க்கும் மேல் ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

டி நடராஜன்:
2019 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். தற்போது இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவையாக இருக்கும் நிலையில், உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் நடராஜனுக்கு வாய்ப்பு தராதது ஆச்சரியமாக இருக்கிறது.

யுஸ்வேந்திர சாகல் :
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சிவப்புப் பந்து மற்றும் வெள்ளைப் பந்து என இரண்டு வடிவத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெள்ளைப் பந்து வடிவத்தில் முற்றாக ஒதுக்கிய பிறகு இவரது கிரிக்கெட் வாழ்க்கை தேசிய அணிக்கு பெரிதாக இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

பிரிதிவி ஷா : தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து கவனம் ஈர்த்த இவர், அதற்குப் பிறகு பல பிரச்சினைகளால் இந்திய அணியை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். தற்பொழுது மும்பை மாநில அணிக்காக தொடர்ந்து விளையாடும் இவரை துலீப் டிராபிக்காகதேர்வு செய்யவில்லை. மேலும் இவர் தற்பொழுது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

அபிஷேக் ஷர்மா :
தற்போது இந்திய அளவில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிரடியான வீரராக பார்க்கப்படுகிறார். மேலும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக பேட்டிங்கில் முன்னேற இவருக்கு வாய்ப்பு சிவப்புப் பந்து வடிவத்தில் கொடுத்திருக்கலாம்.

இதையும் படிங்க : ஒரே நாளில் 17 விக்கெட்.. ஷமர் ஜோசப் அசத்தல் பவுலிங்.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி.. 2வது டெஸ்ட்

சஞ்சு சாம்சன் :
இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் ஒன்று இரண்டு போட்டியில் இவரால் உடனே ஜொலிக்க முடியவில்லை. மிகவும் சிக்கலாக இருக்கும் இவரது தேசிய கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னடைவாக இவரை சிவப்பு பந்து வடிவத்திலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்க்கவில்லை.

ஹர்திக் பாண்டியா :
கம்பீர் மற்றும் அகர்கர் இருவருமே ஹர்திக் பாண்டியாவை வெள்ளைப் பந்து வடிவத்தில் மட்டுமே பார்க்கிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. இதன் மூலம் இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலியாவில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில்அது முடிவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -