இங்கிலாந்து அணியின் முன்னாள் சாதனை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் இந்தியாவின் பும்ராதான் எல்லா காலத்திலும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று ஏற்றுக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்.
இந்தியா அணியை நேற்று முன்தினம் டி20 உலக கோப்பை செமி பைனலில் பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் பும்ரா மிகப்பெரிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு உலகெங்கும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எல்லா காலத்திலும் சிறந்தவர்
தற்போது பும்ராவை இதுவரையில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுடன் வைத்து வாதிட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அவரை எல்லாரையும் விட சிறந்தவர் என்று ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறி ஸ்டுவர்ட் பிராட் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே சிறந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா என்று வாதிடலாம். மால்கம் மார்ஷல், ரிச்சர்ட் ஹாட்லி, அம்ப்ரோஸ், மெக்ராத் பல பெரியவர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒப்பீடு செய்வது கடினமான ஒன்றுதான். ஆனால் மார்கம் மார்சல் போன்ற தலைசிறந்த ஒருவரை உலகக் கோப்பை செமி பைனலில் இப்படி செயல்பட்டு நாம் பார்க்கவில்லை. பந்து அடித்து நொறுக்கும் காலகட்டத்தில் பும்ராவை தட்டி விளையாடுகிறார்கள். அவருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்க யாரும் விரும்புவதில்லை”
மிகப்பெரிய புத்திசாலி
“மிகவும் அரிதாகத்தான் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தன்னுடைய முதல் பந்தையே மெதுவான பந்தாக வீசுவதை பார்க்க முடியும். இப்படியான பந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை முதலில் வீசுவது என்றால் புரூக் என்ன செய்வார் என்று முன்கூட்டியே பும்ரா கணித்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். அது வேலையும் செய்தது”
இதையும் படிங்க : பைனல்ல நியூசிலாந்து பிளான் இதுதான்.. சஞ்சு அபிஷேக் இஷான் இதை உடைக்க இதை செய்யணும் – அஸ்வின் கருத்து
“இப்படியான தெளிவான சிந்தனை, தனது விளையாட்டையும் எதிரணியையும் சரியாகப் புரிந்து கொள்வது, எதிரணி என்ன செய்யும் என சரியாக கணிப்பது என இந்த எல்லாவற்றிலும் பும்ரா வெற்றிகளை பெறக்கூடிய ஒரு உயர்ந்த நிலைக்கு சென்று கொண்டே இருக்கிறார். நான் நேரில் பார்த்தவர்களில் இவர்தான் சிறந்தவர்” என்று கூறியிருக்கிறார்.






