பைனல்ல நியூசிலாந்து பிளான் இதுதான்.. சஞ்சு அபிஷேக் இஷான் இதை உடைக்க இதை செய்யணும் – அஸ்வின் கருத்து

0
4
Ashwin

நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ரவிச்சந்திரன் ஆசிரியர் அறிவுரை கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணி பொதுவாகவே திட்டங்களை அருமையாக கொண்டு வந்து செயல்படுத்தும் அணியாக இருந்து வருகிறது. எனவே அவர்களுக்கு எதிராக விளையாடும் பொழுது மிகவும் புத்திசாலித்தனம் விளையாட வேண்டும்.

- Advertisement -

நியூசிலாந்து திட்டம்

நியூசிலாந்து அணி பவர் பிளேவில் முதல் ஓவரை மேட் ஹென்றிக்கு கொடுக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஓவரை சுழல் பந்துவீச்சாளர் மெக்கான்ஸியிடம் கொடுக்கிறது. அவர் லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின் இரண்டையும் வீசக்கூடியவராக இருக்கிறார். இடது மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு மாற்றி மாற்றி வீசுகிறார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் செமி பைனல் போட்டியில் இவர் ஒரே ஓவரில் குயிண்டன் டி காக் மற்றும் ரியான் ரிகல்டன் இருவர் விக்கெட்டையும் கைப்பற்றி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். எனவே தொடக்கத்தில் இந்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் இந்திய டாப் ஆர்டர்கள் சிறப்பான திட்டத்துடன் வரவேண்டும்.

- Advertisement -

இதை செய்யுங்கள்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “மெக்கான்ஸி மிகவும் புத்திசாலித்தனமான பவுலர். அபிஷேக் ஷர்மாவை லெக்சைடு மற்றும் இசான் கிஷானை ஆப்சைட் அடிப்பதற்கு அவர் விடமாட்டார். அவர் திட்டங்களில் செயல்படுத்துவதில் மிகவும் புத்திசாலியாக இருப்பார். நம்முடைய பையன்களுக்கு இதில் மீள்வதற்கு வழி இருக்கிறதா? இஷான் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முடியுமா? அபிஷேக் சிங்கிள் எடுத்து சஞ்சு சாம்சனை அடிக்க சொல்லி ஸ்ட்ரைக்கை கொடுக்க முடியுமா?”

இதையும் படிங்க : பைனல்ல நியூசிலாந்து ஓட விடுவாங்க.. இந்தியாவுக்கு அவங்கள பார்த்தா பயம்.. சாம்பியன் ஆவாங்க – பிராட் ஹாடின் கணிப்பு

“இதில் புத்திசாலித்தனமான முடிவு என்றால் அபிஷேக் ஷர்மா ஒரு சிங்கிள் எடுத்து சஞ்சு சாம்சனிடம் ஆப் ஸ்பின்னரை கொடுத்து அடிக்க சொல்ல வேண்டும். எங்களுடைய முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் இடம் இருந்து ஆட்ட விழிப்புணர்வுடன் கூடிய மேம்பட்ட புத்திசாலித்தனமான பேட்டிங்கை நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -