வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டெஸ்ட்; வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்!

0
797
Indvswi2023

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது.

இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டி வருகின்ற 12ஆம் தேதி டாமினிகா மைதானத்தில் தொடங்க இருக்கிறது. தற்பொழுது இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு இந்தப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்த முறை ரோகித் சர்மா தன்னுடன் புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்ட ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக கொண்டு விளையாடினார் என்ற செய்திகள் வெளியே வருகிறது. ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து தன்னுடைய முதல் சர்வதேச பயிற்சி ஆட்டத்தை சிறப்பாக முடித்திருக்கிறார்.

அதே சமயத்தில் இன்னொரு புறத்தில் மிகத்தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்த விராட் கோலி இந்தப் பயிற்சி போட்டியில் மிக மலிவான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். மீண்டும் வெளியே செல்லும் பந்து ஒன்றுக்கே தனது விக்கெட்டை கொடுத்து இருக்கிறார்.

இந்தப் பக்கம் இந்தியாவில் நடந்துவரும் துலிப் டெஸ்ட் டிராபியில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா மிக அபாரமாக விளையாடி சதம் அடித்து தற்பொழுது ஆட்டம் இழக்காமல் மேற்கொண்டு ரன்கள் எடுக்க களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டுக்கான இந்திய அணி எப்படி அமையும் என்பது ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதுகுறித்து பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் முதல் மூன்று இடங்களில் கேப்டன் ரோஹித் சர்மா சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் முதல் வாய்ப்பை பெறுவது உறுதி என்று தெரிகிறது. அடுத்த மூன்று இடங்களுக்கு விராட் கோலி, ரகானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறுவதும் உறுதி.

இதற்கு அடுத்து இந்த முறை ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் விளையாடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வாய்ப்பு தரப்படாத அஸ்வின் இந்த முறை எட்டாவது இடத்தில் களம் இறங்குவார். 9, 10, 11 ஆகிய இடங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் உனட்கட், முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் விளையாடுவதுஅதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறது.

மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இந்திய அணி தனது முதல் தொடராக வெஸ்ட் இண்டிஸ் அணியை சந்தித்துதான் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறிய அணியாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையாகவே இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியமானதுதான்!