நாளை முதல் டெஸ்ட் போட்டிக்கான வலுவான உத்தேச இந்திய அணி!

0
227
Ind vs Aus

நாக்பூர் மைதானத்தில் நாளை நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராஃபியின் முதல் டெஸ்ட் போட்டி இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியமானது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி இடம் இரண்டு முறை இந்தத் தொடரை ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளதால் அதற்கு பழிதீர்க்கும் முனைப்பில் இருக்கிறது!

- Advertisement -

கடந்த வருடத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் இருந்தார். எதிர்பாராத விபத்தின் காரணமாக அவர் தற்பொழுது இடம்பெற முடியாமல் போனதால், ஒரு விக்கெட் கீப்பரையும் ஒரு தாக்கம் தரக்கூடிய பேட்மேனையும் தேட வேண்டிய இரு தேவைகள் உருவாகிவிட்டது.

மேலும் கே எல் ராகுல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சமீப காலத்தில் சரியாக செயல்படவில்லை. அதே சமயத்தில் இளம் வீரர் சுப்மன் கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கத்தில் ஜடேஜா அஸ்வின் உடன் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக அக்சர் பட்டேல், குல்தீப் இருவரில் யார் இடம்பெறுவது என்கின்ற மாதிரியான குழப்பங்கள் நிலவுகிறது. மேலும் தாக்கம் நிறைந்த ஆட்டத்திற்கு ரிஷப் பண்டுக்கு பதிலாக சூரியகுமார் தேவையும் இருக்கிறது.

இந்த நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படிப்பட்ட 11 பேர் கொண்ட இந்திய அணி வலுவானதாக இருக்கும் என்று இந்தச் சிறிய கட்டுரை தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்!

- Advertisement -

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் சுழற் பங்குவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் சுப்மன் கில் சதம் அடித்தார். மேலும் இந்தியாவில் வைத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் மற்றும் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அடுத்து நியூசிலாந்து அணிக்கு உடன் டி20 போட்டியில் அதிரடியாக சதம் விளாசி தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை காட்டினார். நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதாலும் அந்த தன்னம்பிக்கையோடு தொடர முடியும் என்பதாலும் கே எல் ராகுலுக்கு பதிலாக இவரே துவக்க வீரராக இடம்பெறுவது அவசியம்.

ஆஸ்திரேலியா அணியில் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ஐந்து பேர் இடது கை வீரர்கள் என்பதால் அணியில் ஜடேஜா மற்றும் அக்சர் என இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் தேவைப்பட மாட்டார்கள். எனவே மணிக்கட்டு சுழற் பந்து வீச்சாளரான குல்தீப் வெரைட்டி தர அணிக்கு தேவைப்படுவார்.

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மிக வேகமாக அடிக்கப்படும் 30, 40 ரன்கள் கூட வெற்றிக்கு மிக முக்கியத் தேவையாக அமையும். இந்த வகையில் ரிஷப் பண்ட் இடத்தை சமன் செய்ய சூரியகுமார் யாதவ் அணிக்கு தேவைப்படுகிறார்.

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான டெஸ்ட் ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யும் பிராப்பர் விக்கெட் கீப்பர் தேவை. அதனால் கே.எல். ராகுல் போன்ற பார்ட் டைம் விக்கெட் கீப்பரை கொண்டு வர முடியாது. எனவே முழு நேர ஸ்பெஷல் விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத் தேவைப்படுகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய அணியின் பிளேயிங் லெவன் ;

ரோஹித் சர்மா – சுப்மன் கில்
செதேஸ்வர் புஜாரா – விராட் கோலி
கே எஸ் பரத் – சூரியகுமார் யாதவ்
ரவீந்திர ஜடேஜா – ரவிச்சந்திரன் அஷ்வின்
குல்தீப் யாதவ் – முகமது சமி – முகமது சிராஜ்