நாளை நெதர்லாந்துக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு?!

0
5656
ICT

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த வெற்றிக்கு தொடரை நடத்தும் இந்தியாவின் அணி லீக் சுற்றில் தொடர்ச்சியாக விளையாடிய எட்டு போட்டிகளையும் வென்றது முதன்மை காரணமாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி நாளை பெங்களூரு மைதானத்தில் லீக் சுற்றில், தனது கடைசிப் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து இரண்டு நாட்கள் ஓய்வில், மும்பையில் வைத்து அரையிறுதியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

தற்போது நான்கு போட்டிகளாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் வீரர்கள், ஒரு அணியாக மிகவும் சரியாக இருக்கிறார்கள்.

இந்த அணி பெறக்கூடிய வெற்றி மிகவும் தடாலடியாக அதிரடியாக இருக்கிறது. குறிப்பாக முகமது சாமி இந்திய பிளேயிங் லெவனில் வந்ததும் பந்துவீச்சு பெரிய பலமிக்கதாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஒரு வார ஓய்வில் இருந்து வரும் இந்திய அணி, இதற்கு அடுத்து இரண்டு நாள் ஓய்வில் முக்கியமான அரையிறுதி போட்டியை விளையாட இருக்கிறது. எனவே பெரிய ஓய்வு இருப்பதால் வழக்கமான அணியையே களம் இறக்குவார்களா? இல்லை இரண்டு நாட்கள் மட்டுமே அரையிறுதிக்கு ஓய்வு கிடைக்கும் என்பதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பார்களா? என்கின்ற சந்தேகம் இருக்கிறது.

தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் ஏற்கனவே ஒரு வாரம் ஓய்வு இருக்கின்ற காரணத்தினால், நாளைய போட்டிக்கும் ஓய்வு கொடுத்தால் அது நீண்ட ஓய்வாக அமைந்துவிடும். மேலும் நீண்ட ஓய்வில் இருந்து வரக்கூடிய வீரர்கள் நேராக நாக் அவுட் அரையிறுதி போட்டியில் விளையாட வேண்டியதாக இருக்கும்.

எனவே இந்திய அணி நிர்வாகம் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் எண்ணத்தில் இருக்காது. முக்கியப் போட்டிக்கு வீரர்கள் போட்டிக்கான பயிற்சியில் இருக்க வேண்டும். இதன் காரணமாக நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசியாக நான்கு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் வீரர்களே களம் இறங்குவார்கள் என்று நம்பலாம். ஒருவேளை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகம் என்றால் மட்டுமே அஸ்வின் உள்ளே வந்து சிராஜ் வெளியே போவார்.

நாளை நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.