இந்திய கிரிக்கெட்

ஸ்ட்ரைக் ரேட் முக்கியமானது நான் புரிஞ்சுகிட்டேன்.. நிஷாங்கா கிட்ட சொல்லி வச்சு செஞ்சோம் – கேஎல் ராகுல் பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கேஎல்.ராகுல் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 223 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷாங்கா 33 பந்துகளில் 62 ரன்கள், கேஎல்.ராகுல் 40 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து டெல்லி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கேஎல்.ராகுல் பழைய சம்பவம்

கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் கேஎல்.ராகுல் பேசி இருந்தபோது ஸ்டிரைக் ரேட் என்பது முக்கியம் கிடையாது ஆடுகளத்திற்கு தகுந்தது போல தான் விளையாட வேண்டும் என்று பேசுகிறார். இது அப்போது பெரிய விவாதத்திற்கு உள்ளானது. அப்போது அவர் லக்னோ அணிக்காக மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார்.

தற்போது கேஎல்.ராகுல் ஆட்டம் மீண்டும் பழையபடி அதிரடியாக மாறி உள்ளது. இந்த ஆண்டு அவர் மொத்தம் 433 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் எப்போதும் இல்லாத அளவுக்கு 183 என மிகவும் சிறப்பாக உள்ளது.

- Advertisement -

நவீன டி20க்கு முக்கியம்

இதுகுறித்து கேஎல்.ராகுல் பேசும்போது “நாம் எப்பொழுதும் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறோம். தனிப்பட்ட சாதனைகள் படைக்கப்படுகிறது நிறைய ரன்கள் அடித்தப்படுகிறது ஆனால் புள்ளிகள் கிடைக்காமல் இருக்கிறது. நாங்கள் அணியில் எந்த இடத்தில் என்ன தவறுகள் செய்கிறோம் என்று அலசி ஆராய்ந்தோம். ஆனால் நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை”

இதையும் படிங்க : டி20 யில் புவனேஸ்வர் குமாரை செலக்ட் செய்ய வேண்டும்.. பும்ரா கூட சேர்த்து விட்டா அந்த மேஜிக் நடக்கும் – சேவாக் விருப்பம்

“அதே சமயத்தில் போட்டியில் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாமல் நாங்கள் இருந்தோம். இதனால் நாங்கள் தொடர்ந்து தோற்றோம். தற்போது நாங்கள் இதை சரி செய்து வெற்றி பெற்று இருக்கிறோம். மேலும் ஆட்டம் தொடக்கம் முதலே நிஷாங்கா இடம் நல்ல கிரிக்கெட் ஷாட் விளையாட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். தற்போது நவீன டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts