இந்திய டி20 அணியில் மீண்டும் புவனேஸ்வர் குமாரை தேர்வு செய்ய வேண்டும் என வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது. மீண்டும் அவருடைய ஸ்விங் கூர்மை சிறப்பாக வருகிறது.
இந்திய அணியின் பிரச்சனை
தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் அர்ஸ்தீப், ஹர்திக் பாண்டியா எல்லோரும் ஐபிஎல் தொடரில் மோசமாக பந்து வீசி வருகிறார்கள்.
எனவே மீண்டும் புவனேஸ்வர் குமாரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டுமென பரவலாக ரசிகர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் அவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
சேவாக் விருப்பம்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் போது “தற்போது புவனேஸ்வர் குமார் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒரு போட்டியில் இரண்டு அல்லது மூன்று விக்கெட் தொடர்ந்து கைப்பற்றி வருகிறார். நேற்றும் கூட அவர்தான் ஆர்சிபி அணியை போட்டியில் வைத்தார். யோசித்துப் பார்த்தால் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு பலத்தை அவர்தான் உருவாக்குகிறார்”
இதையும் படிங்க : நேத்து கேப்டனா கில் செஞ்ச ஒரு வேலையை.. இந்த ஐபிஎல்ல வேற எந்த கேப்டனும் செய்ய மாட்டாங்க – அஸ்வின் பாராட்டு
” இப்போது அவருடைய பந்துவீச்சு மிகவும் கூர்மை அடைந்து பழைய முறைக்கு மாறி இருக்கிறது. அவருடைய ஸ்விங் கட்டுப்பாடு அற்புதமாக இருக்கிறது. எனவே அவரை பும்ராவுடன் ஜோடி சேர்க்க வேண்டும். ஒருபுறத்தில் அவர் யார்க்கர் வீசி கட்டுப்படுத்தினால், இன்னொரு முனையில் புவனேஸ்வர் குமார் புதிய மற்றும் பழைய பந்துகளில் ஸ்விங் செய்து அசத்தலாம்” என்று கூறி இருக்கிறார்.






