கிரிக்கெட் வரலாற்றில் வினோதம்.. டைம் அவுட் முறையில் மேத்யூஸ் வெளியேற்றம்.. விதி என்ன சொல்கிறது?

0
2112
Srilanka

இன்று டெல்லி மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் வினோதமான ஒரு அவுட் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு அணிகளும் தலா ஏழு போட்டிகள் விளையாடி இருக்கின்றன. இதில் இலங்கையில் இரண்டு போட்டிகளையும் பங்களாதேஷ் அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு, நடப்பு உலக கோப்பையில் புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களில் வரவேண்டிய காரணம் இருப்பதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் கொண்டதாக மாறுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது. இலங்கை அணி 13 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கு அடுத்து சரித் அசலங்கா மற்றும் சதிரா இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை அணியை மீட்க ஆரம்பித்தார்கள். ஓரளவுக்கு அவர்கள் சரிவிலிருந்து இலங்கை அணியை மீட்டவேளையில் சதிரா ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் விளையாடுவதற்கு உள்ளே வந்தார். வந்தவர் முதல் பந்தை சந்திக்க சென்று, ஆனால் அதற்குள் கிரிஸில் இருந்து நகர்ந்து வந்து, ஹெல்மெட் சரி இல்லை, வேறு ஹெல்மெட் வேண்டுமென வெளியில் இருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் அவர் விதியை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் கூறி அவுட் கேட்டார். சிறிது நேரம் சலசலப்புக்குப் பிறகு நடுவர்கள் அவுட் கொடுக்க, டைம் அவுட் முறையில் பரிதாபமாக உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மேத்யூஸ் வெளியேறினார்.

கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது என்றால், ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்ததும், அடுத்த பேட்ஸ்மேன் வந்து இரண்டு நிமிடங்களுக்குள் கிரீசில் கார்ட் எடுத்து பந்தை சந்திக்க தயாராகி விட வேண்டும். இரண்டு நிமிடங்களை தாண்டினால் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்படும். அதே சமயத்தில் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் தயாராகி இருந்து, பந்து வீசுவதற்கு மேற்கொண்டு தாமதமானால் அது பிரச்சனை கிடையாது.

தற்பொழுது இந்த விதியின் படிதான் மேத்யூஸ் ஆட்டம் இழந்து இருக்கிறார். கிரிக்கெட்டில் இப்படி ஒரு விதி இருந்தாலும் கூட, இந்த டைம் அவுட் முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் ஆட்டம் இழப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது!