“எதுக்கு தேவையில்லாம ரஞ்சி போட்டிகளை நிறுத்திடுங்க!” – சுனில் கவாஸ்கர் பிசிசிஐ மீது கடுமையான தாக்குதல்!

0
417
Gavaskar

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய டி20 அணி மாற்றியமைக்கப்பட்டது.

- Advertisement -

இதேபோல் தற்சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடி தோல்வி அடைந்திருக்க டெஸ்ட் அணியிலும் பெரிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே இந்த காரணங்களுக்காக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்படும் இந்திய அணி என்பது இந்திய கிரிக்கெட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதில் புஜரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் பேட்ஸ்மேன்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் இருவருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ரஞ்சித் சீசங்களாக மிக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சப்ராஸ்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “கடந்த மூன்று ரஞ்சி சீசன்களில் சர்ப்ராஸ் கான் ஆவரேஜ் ஆக போட்டிக்கு நூறு ரன்கள் அடித்திருக்கிறார். அவர் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக வேறு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவரை விளையாடும் அணியில் சேர்க்க வேண்டாம். ஆனால் 15 பேர் கொண்ட அணியில் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும்.

அவருடைய ரஞ்சி செயல்பாட்டை நீங்கள் அங்கீகரிப்பதாக காட்ட வேண்டும். இல்லையென்றால் ரஞ்சி டிராபி விளையாடுவதை நிறுத்தி விடுங்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. ஐபிஎல் விளையாடுவது இந்திய டெஸ்ட் அணிக்குள் வருவதற்கு போதும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேள்வி கேட்டுள்ளார்.

சப்ராஸ்கான் கடந்த ரஞ்சி சீசனில் 92 ஆவரேஜில் ஆறு போட்டிகளில் 556 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக இதுவரை 37 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 13 சதங்கள் அடித்து 80 ரன் சராசரி உடன் 3055 ரன் குவித்திருக்கிறார்.

இந்த வருடம் ருத்ராஜ் ரஞ்சி சராசரி 52. ஜெய்ஸ்வால் ரஞ்சி சராசரி 45. ஆனால் சர்ப்ராஸ் கானின் ரன் சராசரி 93. இப்படி இருக்க அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது மிகவும் மோசமான ஒரு விஷயம்!