“இந்தியாவின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு முடிவு கட்டுங்க!” – இங்கிலாந்து அணிக்கு நாசர் ஹுசைன் அதிரடி உத்தரவு!

0
5017
Hussain

நேற்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் இங்கிலாந்து படுதோல்வி அடைந்தது.

மேலும் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று, தற்போது லீக் சுற்றுவுடன் உலகக் கோப்பை தொடரை விட்டு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெளியேற இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்தின் இந்த தோல்விகள் உலகக் கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் குறித்து நிறைய கேள்விகளை உருவாக்கி இருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களுடைய கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறும் பொழுது, எங்களிடம் அனுபவமும் நம்பிக்கையும் கொண்ட நிறைய வீரர்கள் அணியில் இருக்கிறார்கள், நாங்கள் இந்த இரண்டும் இல்லாமல் தோற்கக் கிடையாது, ஆனால் நாங்கள் எங்களுடைய தரத்திற்கு செயல்படாததுதான் காரணம் என்று பேசியிருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போல அணுகினால் சரி வராது என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். இங்கிலாந்து அணியிடம் பெயர் அளவில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் கூட, தாக்கத்தை ஏற்படுத்தி தரும் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணிக்கு ஒரு சதவீதத்தில் அரை இறுதி வாய்ப்பு இருக்க செய்கிறது. இதற்கு இங்கிலாந்து அணி தான் விளையாடும் நான்கு போட்டிகளையும் அடுத்து வெல்ல வேண்டும். வருகின்ற ஞாயிறு இந்தியாவிற்கு எதிராக லக்னோ மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டி குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கூறும்பொழுது “இந்தத் தோல்விகளுக்கு இங்கிலாந்து வீரர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். பேட்ச்சுகளை சரி செய்ய விளையாடுவதில் நான் சிறந்த வீரர் கிடையாது. ஆனால் இங்கிலாந்து இப்போது இதைத்தான் செய்ய வேண்டும்.

இங்கிலாந்து லக்னாவுக்கு சென்று இந்தியாவின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியாவிற்கும் உலகத்திற்கும் தங்கள் எவ்வளவு சிறந்த கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம், எவ்வளவு சிறந்தவர்கள் என்று நினைவுபடுத்த வேண்டும்.

இங்கு மற்ற எல்லாரும் நல்லபடியாகவே விளையாடுகிறார்கள். இங்கிலாந்து விளையாட முடியாமல் போனதற்கு, அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிகம் விளையாடவில்லை என்று சொல்வது நொண்டி சாக்கு. தோல்விக்கு வீரர்கள்தான் காரணம்!” என்று கூறி இருக்கிறார்!