9 மாதம் கழித்து முதல் பந்தில் ரோகித்தை காலி செய்த ஸ்டோக்ஸ்.. கில்லை பேசி விக்கெட் எடுத்த ஆண்டர்சன்

0
435
Stokes

மார்ச் 8. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி 218 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

நேற்று முதல் நாள் முடிவில் இந்திய அணி 135 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்தது. நேற்று ஆட்டம் இழக்காமல் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இன்று தொடர்ந்து விளையாடினார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரும் இன்று முதல் செஷனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 129 ரன்கள் குவித்தார்கள். இருவருமே மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து மதிய உணவு இடைவேளைக்கு சென்றார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த இருவருமே மீண்டும் அதிரடியாக விளையாட முற்பட்டார்கள். இங்கிலாந்து அணியிடம் மொத்தம் நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒன்பது மாதங்கள் கழித்து தானே பந்து வீச பந்தை கையில் எடுத்தார். அவர் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக பந்து வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் ரோகித் சர்மாவுக்கு வீசிய முதல் பந்தை உள்நோக்கி வீசினார். ஆனால் பந்தை வெளியில் எடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வீசி இருந்தார். இதனால் உள்நோக்கி சென்ற பந்து அப்படியே வெளியில் திரும்பி ரோகித் சர்மா எதிர்பாராத நேரத்தில் கிளீன் போல்ட் ஆனார். அவர் 103 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த சுப்மன் கில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை கிரீஸில் இருந்து இறங்கி வந்து அடித்தார். அந்த ஓவரின் முடிவுக்கு பின்னால் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிசயமாக கில்லை கூப்பிட்டு சிரித்தபடி பேசினார். எப்பொழுதுமே ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்படி பேட்ஸ்மேன்களிடம் சிரித்து பேசுகின்ற ஆளே கிடையாது.

இதற்கு அடுத்து மீண்டும் பந்துவீச்சுக்கு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சுப்மன் கில்லுக்கு உள்நோக்கி சீம் ஆன அற்புதமான பந்து ஒன்றை வீச, சுப்மன் கில் பேட் கொஞ்சம் மெதுவாக கீழே இறங்க ஏமாந்து கிளீன் போல்ட் ஆனார். அவர் 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : பாஸ்பாலுக்கு மாஸ் காட்டிய ரோகித்-கில் அதிரடி சதம்.. 46 ரன் முன்னிலை.. 9 விக்கெட் கைவசம்

திடீரென பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடுகளத்தில் ஏதோ பந்துவீச்சுக்கு உதவி இருப்பது போல காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜெய்ஸ்வாலிடம் பேசி ஒரு முறை விக்கெட் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.