14 புள்ளியில் இருந்தாலும் ராஜஸ்தான் பிளே-ஆப் செல்ல முடியும்! அதற்கு யார் யாருடைய வெற்றியை சார்ந்திருக்க வேண்டும்? – குவாலிபிகேசன் சினாரியோ!

0
2617

14 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிவிடவில்லை. இந்த 14 புள்ளிகளை வைத்துக்கொண்டு பிளே-ஆப் கனவுடன் காத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்!.

- Advertisement -

முதலாவதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதும் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற வேண்டும். இல்லையேல் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னர் இருக்கும் கொல்கத்தா அணி 103 ரன்கள் வித்தியாசத்திற்கும் குறைவாக வெற்றிபெற வேண்டும்.

இரண்டாவதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்திக்க வேண்டும். ரன்கள் வித்தியாசம் அல்லது விக்கெட் வித்தியாசம் இதில் பெரிதளவில் கணக்கில் வராது. மும்பை தோல்வியை தழுவினால் மட்டுமே போதுமானது. ஏனெனில் மும்பை அணி ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன்ரேட்டை விட குறைவில் இருக்கிறது.

கடைசியாக, ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி குறைந்தபட்சம் 5 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதற்கு குறைவான வித்தியாசத்தில் குஜராத் வெற்றிபெறும் பட்சத்தில், ஆர்சிபி அணியின் ரன்ரேட் பெரிதளவில் பாதிக்காது. தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு முன்னே புள்ளி பட்டியலில் இருக்கும். நேரடியாக ஆர்சிபி அணி தகுதி பெற்று விடும். இது நடக்காமல் இருக்க ஐந்து ரன்களுக்கும் அதிகமாக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -