கில் சாதாரண ஆள் இல்ல.. கேப்டனுக்கு சரியானவர்.. ஆனா அவருக்கு பிசிசிஐ இதை செய்யணும் – ஸ்டீவ் வாக் பேட்டி

0
204
Steve

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில்லை கொண்டு வந்திருப்பது மிகவும் சரியான முடிவு என ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரத்தில் இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள்.

- Advertisement -

கில் மீதான விமர்சனம்

தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில் ஆசியா கண்டத்தை தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரையில் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். மேலும் அவருக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணங்கள் சமீபத்தில் மிகவும் மோசமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் அனுபவம் வாய்ந்த பும்ரா இருக்கும் பொழுது சுப்மன் கில்லுக்கு கேப்டனாக வாய்ப்பு கொடுத்தது தவறானது என இந்திய ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தான் உலகக் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான சிறந்த கிரிக்கெட் கேப்டனான ஸ்டீவ் வாக் சுப்மன் கில்லுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ இதைச் செய்ய வேண்டும்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மறு எழுச்சிக்கு அடித்தளமிட்ட கேப்டனான ஸ்டீவ் வாக் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவை பாராட்டியிருக்கிறார். மேலும் சுப்மன் கில் திறமையானவர் என்றும் அழுத்தத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : வரலாற்றில் மோசமானவர்களுக்கு ஸ்ரேயாஸ் நல்லது செய்யறார்.. ஆனா கேகேஆர் நன்றி நினைக்கல – ராபின் உத்தப்பா பேச்சு

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “தற்போது இந்திய கிரிக்கெட் நல்ல கைகளில் இருக்கிறது. சுப்மன் கில் அழுத்தத்தின் கீழ் நன்றாக செயல்படுகிறார். மேலும் அப்படியான நேரத்தில் அவர் மிகவும் சிறப்பாக சிந்திக்கிறார். எனவே இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் புதிய கேப்டனாக நல்ல தேர்வாக இருக்கிறார். நீங்கள் அவரை ஒரு கேப்டனாக வளர்வதற்கு நேரம் கொடுத்து உருவாக்க வேண்டும். இது ஒரு பெரிய பொறுப்பு. ஏனென்றால் 1.5 பில்லியன் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது மிகவும் அழுத்தமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -