நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் விதிவிலக்கான ஒரு கேப்டனாக இருந்து வருவதாக ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து அவர் ஐபிஎல் கோப்பையை வென்றார். இருந்த போதும் ஐ பி எல் மெகா ஏலத்திற்கு முன்பாக அந்த அணி நிர்வாகம் தன் கேப்டனையே தக்க வைக்காமல் வெளியில் விட்டது. இது ஸ்ரேயாஸ் ஐயரை மனரீதியாக மிகவும் வருத்தம் அடைய வைத்திருந்ததை அவரே வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
அவர் விதிவிலக்கான கேப்டன்
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கடந்த 10 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத பஞ்சாபின் அணிக்கு 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு கேப்டனாகவும் ஆக்கப்பட்டார். அதே சமயத்தில் தன்னை நம்பி வாங்கிய அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு அழைத்துச் சென்று அசத்தி இருக்கிறார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது ” ஸ்ரேயாஸ் எப்பொழுதுமே ஒரு விதிவிலக்கான கேப்டனாக இருந்து வந்திருக்கிறார். கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்து அவர் மதிப்பை கூட்டி இருந்தாலும், அவர் குறைத்து தன்னை மதிப்பிட்டதாகவே உணர்ந்தார். பின்பு வரலாற்றில் அதிகம் சாதிக்காத ஒரு அணிக்கு கேப்டனாக வந்து, பின்னர் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்று இருக்கிறார். இது அவரது தலைமைத்துவத்தையும் நம்பிக்கையையும் பற்றி சொல்கிறது”
பஞ்சாப்புக்கு சிறந்த வாய்ப்பு
“நீங்கள் சரியான கட்டத்திலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் பொழுதும் சரியான உத்வேகத்தை விரும்புகிறீர்கள். பஞ்சாப் சீசனை அற்புதமான முறையில் ஆரம்பித்து இறுதிக்கு முன்பாக கொஞ்சம் தவற விட்டது. ஆனால் கடைசியாக சிறப்பான முறையில் முடித்து நல்ல உத்வேகத்துடன் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைகிறது”
இதையும் படிங்க : பஞ்சாப்ப ஜெயிக்க விட்டது ஹர்திக் பாண்டியா தான்.. இப்படி எல்லாமா தப்பு பண்ணுவாங்க – சேவாக் விமர்சனம்
“பஞ்சாப் அணியில் இருந்து சில வீரர்கள் தங்கள் தேசிய அணிக்காக திரும்ப இருக்கிறார்கள். இருந்த போதிலும் பஞ்சாப் அணியை பார்க்கும் பொழுது அவர்களது பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாகவே இருக்கிறது. அர்ஸ்தீப் இன்னும் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதுவுமே நல்லது தான். ஏனென்றால் அவர் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக வருவதற்கு தற்பொழுது விரும்புவார்” என்று கூறியிருக்கிறார்.






