ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பேஷ் தொடர் நடந்து முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்ந இந்தத் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேக்ஸ்வெல், ஃபிஞ்ச், ஸ்டோனிஸ், ரசல் போன்ற முக்கிய சர்வதேச வீரர்கள் விளையாடிய காரணத்தினால் ஆரம்பம் முதலே இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பெர்த் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.
இந்த தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே பெருவாரியான வீரர்கள் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் இந்த தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. பல வீரர்களுக்கு கொரோனா பாதித்து உள்ளதால் முக்கிய வீரர்களை சில அணிகள் இழந்துள்ளன. அப்படி சிட்னி சிக்சர்ஸ் அணியும் முக்கிய வீரர்களை இழந்த காரணத்தினால் அந்த அணி மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் இணைத்துக் கொள்ள ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் அனுமதி கேட்டது.
அதிக காலமாக சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு ஆடி வருபவர் ஸ்டீவ் ஸ்மித். டெல்லி அணியின் சிறந்த பேட்டிங் வீரர்களில் ஒருவரான இவர் மூன்று வித கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாடி வருவதன் காரணமாக ஆஸ்திரேலிய நிர்வாகம் இவரை பிக் பேஷ் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. மூன்று முறை கோரிக்கை வைத்துப் பார்த்த போதும் கூட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
என் காரணமாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் தன் படத்துக்கு பெரிய மீசை வைத்தது போன்று எடிட் செய்து இவர் இத்தாலிய வீரர் என்றும் இவர் இன்று இறுதி போட்டியில் விளையாட போகிறார் என்றும் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். தன்னை விளையாட அனுமதிக்காத ஆஸ்திரேலியா நிர்வாகத்தினால் ஸ்ரீ ஸ்மித் வம்பு இழுத்துள்ளார் என்று ரசிகர்கள் இதை அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
Good luck to the @SixersBBL in the Big bash final tonight and also to the Italian import Stephano making his debut 😂 pic.twitter.com/aVsARhkhIJ
— Steve Smith (@stevesmith49) January 28, 2022
கடந்த ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் டெல்லி அணிக்காக விளையாடினார். பிப்ரவரி மாதம் ஏலம் நடக்க இருப்பதால், நிச்சயம் 10 அணிகளில் ஒரு அணியில் முக்கிய வீரராக ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.