3வது டெஸ்டில் ட்விஸ்ட்.. கேப்டன் மாற்றம்; புதிய வீரர் உள்ளே வருகிறார்! இது வெற்றியை சிக்கலாக்குமா? – ரிப்போர்ட்!

0
4109

3வது டெஸ்டில் ஆஸி., அணிக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்தூர் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி துவங்கவுள்ளது. போட்டிக்காக இரு அணிகளும் இந்தூர் மைதானம் சென்று பயிற்சிகளிலும் ஈடுபடத்துவங்கிவிட்டனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன் சொந்தக்காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் வந்துவிடுவார் என தகவல்கள் கூறப்பட்டாலும், இன்னும் அது உறுதியாக தெரியவில்லை.

ஒருவேளை பேட் கம்மின்ஸ் உரிய நேரத்திற்குள் வரமுடியவில்லை என்றால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்த உள்ளார் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.

மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குள் வந்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்பு கேமரூன் கிரீன் மீது இருந்து வந்தது. அவரது உடல்நிலை உரிய நேரத்திற்குள் ஃபிட்டாக முடியவில்லை. தற்போது குணமடைந்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு கிறீன் தயாராக இருக்கிறார். முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார் என்றும் ஆஸி., அணியின் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது கை மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்ட வார்னர், போட்டியின் பாதியிலேயே விலகினார். தற்போது மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். விரைவில் நாடு திரும்பவுள்ளார் என இன்று அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணமாக சொந்த நாட்டிற்கு திரும்பிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்திய அணியை பொறுத்தவரை, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட ஜெயதே உனத்கத், ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை விளையாடி முடித்துவிட்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மற்றபடி இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லை.