ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி20 லீக் கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 64 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை அனுப்பி இருக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி ஆட்டம்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் அபாரமாக விளையாடி 64 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 121 ரன்கள் குவித்தார். வழக்கமாக ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை டெஸ்ட் வீரராக கருதப்படும் ஸ்மித் தற்போது டி20 தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதற்குப் பிறகு விளையாடிய பெர்த் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில் தான் டி20 கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் என்று ஆஸ்திரேலியா அணி தேர்வாளர்களுக்கு தனது அபார சதத்தின் மூலமாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறார். ஸ்மித் இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலக கோப்பை அணியில் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது அவர் அடித்திருக்கும் அபார சதம் டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
தேர்வாளர்கள் என்னிடம் இருந்து விலகி இருக்கிறார்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஆஸ்திரேலியா டி20 அணியில் தேர்வாவதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா நாடு முழுவதும் நிறைய நல்ல பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் அல்லவா? மேலும் எனக்கு வயதாகி வருகிறது. இதனால்தான் ஆஸ்திரேலியா அணியின் தேர்வாளர்கள் என்னிடம் இருந்து சற்று விலகி இருக்கிறார்கள்” என்று சிரித்தபடி கூறினார்.
இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. திரும்பி வரும் 3 மேட்ச் வின்னர்கள்.. புது மாற்றங்கள்
இந்த போட்டியில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு கொண்டிருந்த பிராட் ஹார்டின் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஸ்மித்தின் பேட்டிகை பாராட்டி பேசி இருக்கின்றனர். பிராட் ஹார்டின் ஸ்மித் குறித்து “இவரது சதத்தைப் பார்க்கும்போது ஒரு முழுமையான மகிழ்ச்சி கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார். மேலும் டேவிட் வார்னர் கூறும்போது “ஸ்மித் மறுபடியும் பிக் பாஸ் லீக் தொடருக்கு வந்து சிறப்பாக விளையாடுவதை அவர் விரும்புகிறார். எனவே இந்தத் தருணத்தை அவர் முழுமையாக அனுபவித்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.