பாகிஸ்தான் அணி உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான பதினைந்து பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 17ஆம் தேதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதியும் நடக்கின்றன. மேலும் இந்த இரண்டு போட்டிகளும் முல்தான் மைதானத்தில் வைத்து நடத்தப்படுகிறது.
சையும் அயூப் காயம் தந்த பின்னடைவு
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் காலில் காயமடைந்தார். இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் விளையாடுவதும் இன்னும் சந்தேகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இதன் காரணமாக அவருடைய இடத்திற்கு அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த இடது கை துவக்க பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக் நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார். இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தொடராகவும் அமைகிறது.
திரும்பி வரும் அதிரடி ஸ்பின்னர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இருந்த போதிலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. முக்கியமான ஸ்பின்னர் ஆக நோமன் அலி மட்டுமே தக்க வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சஜித் கான் மீண்டும் வருகிறார். மேலும் இவருடன் நோமன் அலியும் தொடர்கிறார். மேலும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா இருவரும் இடம் பெறவில்லை.
இதையும் படிங்க : மயங்க் யாதவுக்கு ஐபிஎல் தான் முக்கியம்.. டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கல – பிராட் ஹாக் விமர்சனம்
பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல் (து.கே), அப்ரார் அகமது, பாபர் ஆசம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், காஷிப் அலி, குர்ரம் ஷாஜாத். , முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் (வி.கீ), நோமன் அலி, ரோஹைல் நசீர் (வி.கீ), சஜித் கான் மற்றும் சல்மான் அலி ஆகா.