புஜாராவோடு இணைந்து விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்; இங்கிலாந்து முன்னாள் வீரர் கடும் எதிர்ப்பு!

0
12655
Giles

உலகப் புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரான இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆசஷ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து எட்ஜ்பஸ்டன் பர்மிங்ஹாம் மைதானத்தில் ஜூலை 16ஆம் தேதி ஆரம்பிக்கிறது!

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி ஜூலை 27ஆம் தேதி கென்னிங்டன் ஓவல் லண்டனில் துவங்கி நடைபெற்று முடிய இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய உள்நாட்டு டெஸ்ட் கவுண்டிங் தொடரில் சசக்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளுக்கு விளையாட ஒப்பந்தமாக இருக்கிறார். இது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆசஷ் டெஸ்ட் தொடருக்கு தயாராக அவருக்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரணத்துக்காகவே ஸ்மித் இந்த முறை கவுன்டி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். இதே அணியில் கடந்த ஆண்டு முதல் இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா விளையாடி வருகிறார். மேலும் புஜாராதான் இந்த அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்னஸ் லபுசேன் போன்ற சில நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்களும் இந்த முறை கவுண்டி போட்டியில் விளையாடுகிறார்கள்.

தற்பொழுது இதற்கு முன்னால் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் ஆஸ்லே ஜயில்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” இது ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு நல்ல விஷயம். ஆனால் இதில் இரண்டு பக்கங்களும் உள்ளன. சிறந்த வீரர்கள் கவுண்டி போட்டியில் வந்து விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். கவுண்டி போட்டிகளை பார்க்க மக்களை இது உள்ளே கொண்டு வருகிறது. ஆனால் நான் இதை நேர்மறையாக மட்டுமே பார்க்க முடியவில்லை.

- Advertisement -

இதேபோல் ஆஸ்திரேலியாவில் ஆசஷ் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான சீல்ட் தொடரில் எத்தனை இங்கிலாந்து வீரர்களை விளையாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் விட்டிருக்கிறது?!” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதே சமயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறும்பொழுது ” இங்கு ஸ்மித் வந்து விளையாடுவதால் அவரைப் பற்றி இங்குள்ள இங்கிலாந்து வீரர்களும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது!” என்று கூறியிருக்கிறார்!