ஸ்டீவ் ஸ்மித் பெரிய சதம் அடிக்கப் போகிறார்- பிரட் லீ இந்திய அணிக்கு எச்சரிக்கை!

0
260
Brett Lee

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவும் இருக்கிறது!

நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிக அபார வெற்றி பெற்று தொடரின் வலுவான முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்த பெருமையை பெற்றது!

- Advertisement -

இந்த முறை இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அதற்கு முன்பு மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருந்த காரணத்தால், இந்திய ஆடுகளத்திலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் கதையை மொத்தமாக மாற்றி எழுதி விட்டார்கள்.

இதற்கு அடுத்து அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்திரேலிய சென்றார். தற்பொழுது அவர் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. மேலும் வார்னர், அகர், ஹேசில் வுட் ஆகிய வீரர்களும் காயத்தால் நாடு திரும்பி விட்டார்கள்.

இந்த நிலையில் நாளை இந்தூர் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா அணி சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் ஸ்மித் செயல்பாடு எப்படி இருக்கும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வேகபந்துவீச்சாளர் பிரெட்லீ மிகப்பெரிய நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறும் பொழுது
“ஸ்மித் ஒரு மிகச் சிறந்த பேட்டர். அவர் ஒரு சிறந்த பேட்டராக இருந்த காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் கடினமான நேரங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருந்தார். நாக்பூரில் கடினமான நேரங்களை கடக்க மிக உறுதியுடன் பேட்டிங்கில் செயல்பட்டார். எனவே நான் அவரிடம் இருந்து ஒரு பெரிய ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன். அடுத்த போட்டியில் சதமோ இல்லை அதற்கு அடுத்த போட்டியில் சதமோ அவரிடம் இருந்து வரும் என்று நம்புகிறேன். அவர் உண்மையிலேயே நல்ல பார்மில் இருக்கிறார். எனவே அவர் ஒரு பெரிய ரன்னை கொண்டு வருவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஸ்மித் நேர்மறையான வேகத்தை அணிக்கு ஊட்டுவார். அவர் பிக்பாஷ் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த வருடம் ஒரு நல்ல சீசனை கொண்டிருந்தார். அவர் வலைப்பயிற்சியில் செய்வதை களத்தில் கொண்டு வரும் பொழுது அது மிகப்பெரிய ரண்களாக மிகப்பெரிய தாக்கம் மிகுந்ததாக மாறும்” என்று கூறியிருக்கிறார்!