இந்திய கிரிக்கெட்

இந்தியாவுடன் செமி பைனல்.. முரட்டு அதிரடி வீரர் வர வாய்ப்பு.. ஆஸி கேப்டன் ஸ்மித் சூசக தகவல்

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்ஸ் ஸ்டீவ் ஸ்மித் செமி பைனலில் தங்கள் அணியில் முக்கிய வீரர் ஒருவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது. ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிரா உடன் 4 புள்ளிகள் எடுத்த ஆஸ்திரேலியா அணி அவர்களது பிரிவில் முதல் அணியாக செமி பைனலுக்கு தகுதி பெற்றது.

ஸ்டீவ் ஸ்மித் வகுத்த வியூகம்

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தங்கள் அணியில் பகுதி நேர ஆப்-ஸ்பின்னர்களாக இருக்கும் மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரையும் வைத்து 13 ஓவர்கள் பந்து வீச வைத்தார். இதில் மேத்யூ ஷார்ட் விக்கெட் ஏதும் கைப்பற்றாவிட்டாலும் கூட ஏழு ஓவர்கள் பந்துவீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஓவருக்கு தலா மூன்று ரன்கள் என்கின்ற வீதத்தில் கொடுத்தார். இது ஆப்கானிஸ்தான் அணி 300 ரன்கள் ஏற்றுவதற்கு பெரும் தடையை உருவாக்கியது.

எனவே பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்களான இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி துபாயில் செமி பைனலில் விளையாட இருந்தால் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில்தான் நேற்றைய போட்டியில் மேத்யூ ஷார்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நகர முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். தற்போது இது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

களம் இறங்க வாய்ப்புள்ள அதிரடி வீரர்

இந்த நிலையில் மேத்யூ ஷார்ட் செமி பைனலுக்கு கிடைப்பது கடினம் என ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார். இவருடைய இடத்திற்கு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வெறும் 29 பந்தில் அதிரடி சதம் அடித்திருக்கும் ஜாக் பிரேசர் மெக்கர்க் களம் இறங்குவது 100% உறுதியானதாக இருக்கிறது. ஆனால் இவர் பந்து வீசமாட்டார் என்பது, ஒருவேளை செமி பைனலில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சந்தித்தால் இது சாதகமானது.

இதையும் படிங்க : 6-7 வீரர்கள்.. இந்தியாவால் இப்படி பேசறிங்க வாசிம் பாய்.. உங்களால அதை செய்ய முடியாது – ஷாஹித் அப்ரிடி விமர்சனம்

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசும்பொழுது “மேத்யூ ஷார்ட் சிரமப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் இன்றைய போட்டியில் சிறப்பான முறையில் நகர முடியவில்லை என்று நினைக்கிறேன். மேலும் செமி பைன்களுக்கு முன்பு அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். இருந்தபோதிலும் அவருடைய இடத்தை நிரப்புவதற்கான வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Steve Smith