6-7 வீரர்கள்.. இந்தியாவால் இப்படி பேசறிங்க வாசிம் பாய்.. உங்களால அதை செய்ய முடியாது – ஷாஹித் அப்ரிடி விமர்சனம்

0
231
Shahid

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற முடியாமல் வெளியேறியது குறித்து கடுமையான விமர்சனம் செய்த வாசிம் அக்ரமுக்கு ஷாஹித் அப்ரிடி பதில் அளித்திருக்கிறார்.

பாகிஸ்தான் 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை உடன் பகிர்ந்து நடத்தியது. இதற்குப் பிறகு அந்த நாட்டிற்கு ஐசிசி தொடர்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு தற்போது தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரை ஓரளவுக்கு வெற்றிகரமாக நடத்திய போதிலும் அந்த அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை.

- Advertisement -

குவிந்த கடுமையான விமர்சனங்கள்

பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான தோல்விக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். ஒரு புறத்தில் சோயப் அக்தர் உச்சகட்ட கோவத்திற்கு சென்று இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடாத பாபர் அசாமை ஃபிராடு என்று விமர்சனம் செய்தார்.

மேலும் வாசிம் அக்ரம் ஆறு முதல் ஏழு வீரர்களை நீக்கிவிட வேண்டும் என்றும், அவர்களுடைய இடத்திற்கு இளம் வீரர்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கடுமையான முறையில் கூறியிருந்தார். தற்போது வாசிம் அக்ரம் கருத்துக்கு ஷாஹித் அப்ரிடி கேள்வி எழுப்பி பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

உங்களிடம் வீரர்கள் இருக்கிறார்களா?

இதுகுறித்து சாஹித் அப்ரிடி பேசும்பொழுது ” நான் அன்று வாசிம் பாய் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். நாம் அனைவருமே இந்திய அணிக்கு எதிராக தோல்வியடைந்த காரணத்தினால் உணர்ச்சிகளால் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் ஆறு முதல் ஏழு வீரர்களை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க : நியூசியுடன் ரோகித் ஆடுவாரா.. ரிஷப் பண்ட்டுக்கு எப்போது வாய்ப்பு.. செமி பைனல் திட்டம் என்ன? – இந்திய துணை பயிற்சியாளர் பேட்டி

“தற்போது அணியில் இருந்து ஆறு முதல் ஏழு வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை கொண்டு வருவதற்கு பென்ச் பலம் இருக்கிறதா? இல்லை உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த தரத்திற்கு உங்களிடம் இளம் வீரர்கள் இருக்கிறார்களா? நாங்கள் அவர்களை கல்விக்கூடங்களில் இருந்து வளர்த்தி இருக்கிறோமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -