இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான விஷயம் என ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்மித் பும்ரா பந்துவீச்சில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் பந்துவீச்சில் மீண்டும் சொற்ப ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். தற்போது அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.
ஆட்டநாயகன் கேப்டன் பும்ரா
நடந்து முடிந்த முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவரது நம்பிக்கையை காப்பாற்றாமல் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஏற்கனவே மூன்று தோல்விகளில் இருந்து வந்த இந்திய அணிக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இந்த நிலையில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பந்துவீச்சில் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியை 104 ரன்களுக்கு சுருட்டினார். இதுவே இந்த போட்டியில் இந்திய அணி முன்னேறி செல்வதற்கான முதல் அழுத்தமான புள்ளியாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆரம்பத்திலேயே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி, மொத்தமாக சேர்த்து எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.
பும்ராவை விளையாட முடியாது
பும்ரா பந்துவீச்சு குறித்து பேசி இருக்கும் ஸ்மித் கூறும் பொழுது “பும்ரா ரன் அப்பில் இருந்தே எல்லாமே வித்தியாசமானது. அவர் ஓடி வருவது போல வேறு யாரும் ஓடி வர மாட்டார்கள். கடைசியில் அவர் பந்தை விடுவிப்பது இன்னும் வித்தியாசமானது. நான் தேவையான அளவுக்கு சந்தித்து விளையாடி இருக்கிறேன். நீங்கள் அவரை எதிர்த்து விளையாட வேண்டும் என்றால் ஒரு நிலைக்கு வருவதற்கு முதலில் உங்களுக்கு சில பந்துகள் ஆவது தேவைப்படும்”
இதையும் படிங்க : கம்மின்ஸ் 2வது டெஸ்டில் இந்த தப்ப மட்டும் செய்யாதிங்க.. ஆனா பும்ராவை விடாதிங்க – ரிக்கி பாண்டிங் அறிவுரை
“அவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களை விட உங்களுக்கு மிக நெருக்கத்தில் வந்து பந்தை வீசுவார். இதனால் பந்து நீங்கள் எதிர்பார்ப்பதை விட உங்களிடம் சீக்கிரத்தில் வந்து சேர்ந்து விடுகிறது. இது ஒரு மோசமான ஆக்சன். அவர் ஒரே முறையில் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்கிறார். மேலும் அவரால் சீமும் செய்ய முடிகிறது.மேலும் நல்ல மெதுவான பந்து, யார்க்கர் என எல்லாம் இருக்கிறது. அவர் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்” எனக் கூறியிருக்கிறார்.