இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்று ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் பெர்த் மைதானத்தில் வைத்து தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால், இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்
இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்திருந்த காரணத்தினால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் ஃபார்ம் குறித்து நிறைய பேச்சுகள் சென்றது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியால் இந்திய அணி தன்னம்பிக்கை ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும், எனவே ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முடியாது என்றும் கூறப்பட்டது.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் லபுசேன், ஸ்மித், உஸ்மான் கவஜா ஆகியோரது பேட்டிங் பார்ம் பற்றி யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். உள்நாட்டு தொடரில் அவர்களுடைய பேட்டிங் பார்ம் மிகவும் சுமாராகவே இருந்தது. மேலும் ஹெட் கடைசியாக தனது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் ஓய்வில் சென்று விட்டார். இப்படி ஆஸ்திரேலியா பேட்டிங் யூனிட் நல்ல நிலையில் இல்லாமல்தான் இருந்தது.
ரிக்கி பாண்டிங் கூறிய அறிவுரை
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நான் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அதே அணியுடன் விளையாடுவேன். நீங்கள் சாம்பியன் வீரர்கள் மீது நம்பிக்கை காட்ட வேண்டும். அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுக்காக பெரிய மேடைகளில் வெற்றி பெற்றவர்கள்”
“லபுசேன் ரன்கள் எடுப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். பேட்டிங் செய்ய கடினமான விக்கெட்டில் உயர்தரமான பந்து வீச்சுக்கு எதிராக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு ஸ்கோர் போர்டில் அவர் ரன்கள் போடுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது”
இதையும் படிங்க : 2வது டெஸ்டில் கில் ஆடுவாரா.. கைவிரல் காயம் எப்படி இருக்கிறது? – கோச் அபிஷேக் நாயர் பதில்
“நீங்கள் ஏதாவது ரிஸ்க் எடுத்து மீண்டும் நம்முடைய வீரர்களை திரும்பப் பெற வேண்டும். பும்ரா போன்ற ஒருவர் உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தால், நீங்கள் அதை எடுத்துக் கொண்டு அவர் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போது பியூ வெப்ஸ்டர் அணிக்கு வந்திருக்கிறார். அவர் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நல்ல ஆல் ரவுண்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். ஆனால் மிட்சல் மார்ஸ் காயம் இல்லாமல் இருந்தால் அவர் தான் விளையாடுவார்” என்று கூறி இருக்கிறார்.