120 SR.. பாபர் அசாமை களத்தில் அவமானப்படுத்திய ஸ்மித்.. பிக்பேஷ் தொடரில் சம்பவம்.. என்ன நடந்தது?

0
291
Smith

தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தன்னுடைய அணியின் வீரர் பாபர் அசாமை ஸ்டீவ் ஸ்மித் அவமானப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் சென்று கொண்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் டேவிட் வார்னரின் சிட்னி தண்டர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

டேவிட் வார்னர் அதிரடி சதம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த சிட்னி தண்டர் அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட டேவிட் வார்னர் அதிரடியில் மிரட்டினார். அவர் 65 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. சாம் கரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய அனைத்து தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் அதிரடியில் கலக்கிய ஸ்டீவ் ஸ்மித் வெறும் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 100 ரன்கள் குவித்தார். இதனால் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 17.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பாபர் அசாமுக்கு அவமானம்

இந்தப் போட்டியின் போது மெதுவாக விளையாடிக் கொண்டிருந்த பாபர் அசாம் ஒரு ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் ரன்னுக்கு தட்டிவிட்டார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் சிங்கிள் ரன் எடுக்க ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த ஓவரை தானே சந்தித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து அடுத்து ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து 32 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: உலக கோப்பையை ஜெயிக்க இவரை முதல்ல கழட்டி விடுங்க.. இல்லனா தோத்துட்டு வருவீங்க – முகமது கைஃப் எச்சரிக்கை

இந்த நிலையில் இறுதியாக ஆட்டம் இழந்து வெளியே சென்ற பாபர் அசாம் பவுண்டரி லைனை பேட்டால் அடித்து விட்டு கோபமாக உள்ளே சென்றார். மேலும் களத்தில் ஸ்மித் எடுத்த முடிவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வீடியோவில் தெரிந்தது. அவரால் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா சென்று அவமானத்தை சந்தித்திருக்கிறார்.

- Advertisement -