விராட் இல்ல.. இந்திய அணியின் ரொனால்டோ இவர்தான்.. இவருக்காக பிசிசிஐ இதை செய்யுங்க – ஹார்மிஸன் கருத்து

0
257
Bumrah

கால்பந்து உலகக் கோப்பைக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை அழைத்துச் செல்வது போல ஒரு இந்திய வீரரை அழைத்துச் செல்ல இந்திய கிரிக்கெட் நிர்வாகம் காத்திருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி தற்போது உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கிறது. இது முடிந்ததும் உடனடியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட துபாய்க்கு செல்லவிருக்கிறது.

- Advertisement -

அந்த ஒரு வீரர்தான் பும்ரா

தற்போது இந்திய அணி நிர்வாகம் இறுதிவரை காத்திருந்து பும்ரா காயம் எப்படி இருக்கிறது? என்பதை பார்த்து அதற்கேற்றவாறு அணியை அமைக்க இருப்பதாக செய்திகள் கூறுகிறது. அவருக்கு மாற்று வீரரை அறிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முன் வராது என்று இதன் மூலம் தெரிகிறது. கடைசி நாக்அவுட் சுற்று கிடைத்தால் கூட பரவாயில்லை என்று இந்திய அணி நிர்வாகம் கருதுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்டீவ் ஹார்மிஷன் கூறும்பொழுது ” என்னை பொருத்தவரை அப்படியான ஒரு வீரராக பும்ரா இருக்கிறார். உங்களால் அவருக்கு பதிலாக ஒரு மாற்றுவீரரை கொண்டுவர முடியாது. அதாவது நான் இறுதிப் போட்டியின் காலை வரை கூட அவருக்காக காத்திருந்து அழைத்துச் செல்வேன். ஏனென்றால் அவர் உலகிலேயே மிகவும் சிறந்த வீரர். இந்திய கண்ணோட்டத்திலும் அவரே மிகச் சிறந்த வீரர்”

- Advertisement -

பும்ரா ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோ

“தற்பொழுது பும்ரா விவகாரத்தை பார்க்கும் பொழுது உங்களின் சிறந்த ஸ்ட்ரைக்கான கிறிஸ்டியானோ ரொனால்டோ உடன் உலகக் கோப்பை கால்பந்தத் தொடருக்கு செல்வது போல இருக்கிறது. நீங்கள் ரொனால்டோ உடன் விளையாடுவதற்கு முடியாது என்று தெரியும் கடைசி நொடி வரையில் அவரை மாற்ற மாட்டீர்கள். எனவே பும்ராவையும் இந்தியா அப்படியே நடத்தும் என்று நான் எதிர்பார்க்கிறேன்”

இதையும் படிங்க : 150 கிமீ பந்தை அடிக்கும் போது தெரியலையா.. தப்பு ரவீந்திரா மேலதான் எங்க மேல இல்ல – சல்மான் பட் விளக்கம்

“அவரை நீங்கள் ஒரு நாற்காலியில் வைத்து தொடருக்கு கூட்டிச் செல்லுங்கள். தற்போது உங்களிடம் இருப்பது 14 பேர் கொண்ட அணி. நீங்கள் முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்கு இந்த அணியே போதுமானது. அவரை அரையிறுதி அல்லது இறுதி போட்டியில் கூட பெற்றுக் கொள்ளலாம். அவரால் உறுதியாக விளையாட முடியாது என்று தெரிந்தால் மட்டுமே மாற்று வீரரை கொண்டு வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -