பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தரா பந்தை பிடிக்கும்போது காயம் அடைந்ததற்கு மைதானத்தில் உள்ள விளக்குகள் காரணம் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விளக்கம் அளித்திருக்கிறார்.
தற்போது பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் நடைபெறுவதற்கு முன்பாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரச்சின் ரவீந்தரா காயம்
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அடித்த பிளாட்டான பந்து ஒன்றை பீல்டிங்கில் இருந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா கேட்ச் பிடிக்க முயற்சி செய்தார். குறிப்பிட்ட அந்தப் பந்து அவர் நின்று இருந்த இடத்திற்கு அவரது முகத்திற்கு நேராக வேகமாக வந்தது.
இந்த நேரத்தில் பந்தை அவர் அதிர்ச்சிகரமாக தவறவிட, அந்தப் பந்து அவரது நெற்றியில் தாக்கி அவர் பெரிய காயம் அடைந்தார். உடனடியாக மைதானத்திற்குள் வந்த பாகிஸ்தான் அணியின் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். தொடர்ந்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு போட்டி நடைபெற்ற லாகூர் கடாபி மைதானத்தின் ப்ளூட் லைட்டுகள்தான் காரணம் என்று கூறப்பட்டது.
தவறு ரச்சின் ரவீந்தரா மேல்தான்
இது குறித்து பேசி இருக்கும் சல்மான் பட் கூறும் பொழுது “ஒரு விஷயம் குறித்து புரிந்து கொள்வதற்கு மக்கள் விரும்பாத பொழுது அது குறித்து நாம் விளக்கம் சொல்வது அவசியம் மற்றும் ஒன்றாகவும் அர்த்தமற்ற ஒன்றாகவும் மாறிவிடுகிறது. சமீபத்தில் மைதானங்களில் எல்இடி லைட்டுகள் பொருத்தப்படுகின்றன. இவை வீரர்களுக்கு எந்த தொந்தரவையும் கொடுக்காமல் நல்ல முறையிலேயே இருக்கின்றன”
இதையும் படிங்க : கம்பீர் கல்யாணத்தை வச்சுட்டீங்க ஆனா கோட் எங்க.. பும்ரா ஷிவம் துபேவும் சமமா? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
” நியூசிலாந்து வீரர்கள் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய பொழுது அதை சிக்சர் அடித்த பேட்ஸ்மேனுக்கு இந்த லைட் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லைதானே? அப்படி இருக்கும் பொழுது பந்தை பிடித்த ரவீந்திராவுக்கு மட்டும் எப்படி பிரச்சினையாக மாற முடியும்? அவர் பந்தை தவறாக கணித்த காரணத்தினால் தவறவிட்டார். அதன் காரணமாகவே அவர் காயமடைந்தார் என்பதுதான் உண்மை. இந்த வகை லைட் மேல் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.






