“ஸ்டார்க் எல்லாம் கிடையாது.. உலக கோப்பையில் இந்த 5 பாஸ்ட் பவுலர்தான் கலக்கப்போறாங்க!” – டேல் ஸ்டெயின் தந்த அசத்தல் பட்டியல்!

0
1364
Starc

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதல் எதிர்பார்ப்பான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோது போட்டி இன்று நடக்க இருக்கிறது!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் பலவிதமான எதிர்பார்ப்புகள் சுவாரசியமான ஒன்றாக மாறியிருக்கின்றன.

- Advertisement -

இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடக்கின்ற காரணத்தினால் வேகப்பந்து வீச்சை விட சுழற் பந்து வீச்சுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். எனவே பங்குபெறும் 10 அணிகளும் தங்களது பவுலிங் யூனிட்டில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருகின்றன.

இதன் காரணமாகவே ஆசிய அணிகளான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் யாரையாவது முக்கிய அணிகளை வீழ்த்தி ஆச்சரியம் தரும் என்கின்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

அதேவேளையில் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய சாதகங்கள் இல்லை என்கின்ற நிலை வரும் பொழுது, இங்கு பெரிய வேகப்பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படக்கூடியவர்கள், ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருப்பார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் என்று தன்னுடைய பார்வையை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் ஐந்து வேகபந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தி இருக்கிறார். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மொஹமத் சிராஜ்
ககிஷோ ரபாடா
ஷாஹீன் ஷா அப்ரிடி
டிரெண்ட் பவுல்ட்
மார்க் வுட்