திடீரென நாடு திரும்பிய நட்சத்திர ஆஸி வீரர்.. மேலும் ஒரு முக்கிய வீரருக்கு தலையில் அடி.. ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு.. என்ன நடந்தது?

0
551
Australia

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைந்தது.

இதற்கு அடுத்து அந்த அணிக்கு திடீரென நெருக்கடி உருவானது. மீண்டும் திரும்ப வந்த ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து நான்கு போட்டிகளை வென்று, தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் வலிமையாக இருக்கிறது.

- Advertisement -

எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர் கொண்டு விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எப்படியும் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குள் வரும் என்பது உறுதியாகத்தான் தெரிகிறது. ஆனால் திடீரென இரண்டு நட்சத்திர வீரர்கள் அந்த அணிக்கு விளையாட முடியாமல் போகக்கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது. இது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக மாறியிருக்கிறது.

தற்பொழுது பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கும் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் கோல்ப் விளையாடி விட்டு திரும்ப வரும் பொழுது தலையில் அடிபட்ட காரணத்தால் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆறு போட்டிகளில் 225 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருக்கும் அதிரடி ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஸ் சொந்த காரணங்களுக்காக வீடு திரும்புவதால் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அவர் உலகக் கோப்பைக்கு திரும்ப வருவாரா என்பது குறித்தும் தெரியாது என்று கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய தரப்பில் வெளியான அறிக்கையில் “ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகி வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

அவர் திரும்ப அணிக்கு எப்போது வருவார் என்பது குறித்தான எந்த உறுதியும் இல்லை. இது சம்பந்தமான மேலும் விவரங்களை தற்பொழுது எதுவும் தர முடியாது!” என்று கூறப்பட்டிருக்கிறது!