2022 ஆசியக் கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் – காரணம் இதுதான்

0
845
Asia Cup 2022

முதல் முறையாக ஆசியக் கோப்பை 1984 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை 15 முறை ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று உள்ளது அதில் அதிக முறை இந்திய அணியே வெற்றி கண்டுள்ளது. இந்திய அணி மொத்தமாக 7 ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு அடுத்தபடியாக இலங்கை அணி 5 முறையும் பாகிஸ்தான் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடந்து முடிந்துள்ள 2 தொடரிலும் (2016 மற்றும் 2018ம் ஆண்டு) இந்திய அணி தான் வென்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வரும் 2018ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
இலங்கையில் இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஆசிய கோப்பை நடைபெறுமா

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆசிய கோப்பை தொடர் இம்முறை இலங்கையில் நடைபெறும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கிய செப்டம்பர் 11-ம் தேதி வரையில் ஆசிய கோப்பை தொடர் (20 ஓவர் ஃபார்மெட்) நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர்.

ஆசிய கோப்பை தொடர் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது இலங்கையில் சூழ்நிலையை சரியாக இல்லை.இலங்கை இதுவரை கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடியை தற்பொழுது எதிர்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் ராஜபகக்ஷா நிர்வாகம் உள்ளது. எனவே இலங்கையில் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

இது சம்பந்தமான ஒரு ஆலோசனையை ஐசிசி கவுன்சில் தரப்பில் கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதன் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஒருவேளை இலங்கையில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற முடியாமல் போனால் வேறொரு நாட்டில் நடைபெறும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள ஒரு அணி தகுதி சுற்று அடிப்படையில் இறுதியில் தேர்வாகும்.

தொடர்ச்சியாக இரண்டு ஆசிய கோப்பை தொடர்களில் வென்றுள்ள இந்திய அணி இம்முறை மூன்றாவது ஆசிய கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.